இந்த 2 பொருளை வாங்கி தொழில் செய்யும் இடத்தில் இப்படி வையுங்கள். இதுநாள் வரை 1 ரூபாயைக் கூட லாபமாக கொடுக்காத உங்கள் தொழில், 1 மாதத்தில் பல கோடிகளை கொட்டிக் தரும்.

cash

சொந்த தொழிலில் முதலீடு செய்து லாபம் எடுப்பது என்பது இந்த காலகட்டத்தில் அவ்வளவு சுலபமான வேலை அல்ல. தொழில் செய்யும் இடத்திற்கான வாடகை, சம்பளம், முதலீட்டுக்கு வட்டி இவைகளை எல்லாம் கொடுத்து, அந்தத் தொழிலிலிருந்து நாம் லாபத்தை எடுப்பது என்பது ஒரு கலை. இதை அவ்வளவு சுலபமாக எல்லோராலும் செய்து விட முடியாது. சில பேருடைய கைராசி சொந்தத் தொழிலில் குறைந்த நாட்களிலேயே நிறைய பணத்தை சம்பாதித்துக் கொடுத்து விடும். சில பேருடைய ராசி செய்த முதலீட்டைகூட திரும்ப எடுக்க முடியாத அளவு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆக சொந்த தொழில் என்பது ஒரு கை ராசியை பொறுத்தது.

cash-rain

சொந்தத் தொழிலுக்கு ஒரு வசீகரத் தன்மை என்பது வேண்டும். நாம் ஒரு சிறிய கடையை வைத்திருந்தாலும், எல்லா வாடிக்கையாளர்களை வசப்படுத்த கூடிய தன்மை நம் கடைக்கு இருக்க வேண்டும். பணத்தை வசியப்படுத்த கூடிய தன்மை அந்த தொழிலின் உரிமையாளருக்கு இருக்க வேண்டும். இந்த வசியம் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களையும், லாபத்தையும் நம் வசப்படுத்த கூடிய திறமையை, வசியம் என்று வைத்துக் கொள்வோம்.

சொந்தத் தொழிலில் லாபத்தை நம் வசப்படுத்துவது எப்படி? வசிய தன்மையை அதிகமாக தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பொருட்களை வாங்கி நம்முடைய கடையில் நிறைவாக வைத்தாலே போதும். அது என்ன பொருள் ஒன்று கஸ்தூரி மஞ்சள், இரண்டாவது பொருள் கசகசா.

kasthuri-manjal

இயற்கையாகவே மஞ்சளுக்கு வசீகரிக்கும் தன்மை உண்டு. குறிப்பாக வாசம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளுக்கு மேலும் வசீகரிக்கும் தன்மை மிக மிக அதிகமாகவே உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் வசீகரத்துடன் பார்த்தவுடனேயே அடுத்தவர்கள் கண்களுக்கு அழகாக தெரிய அந்தப் பெண்கள் மஞ்சளை பூசி குளிப்பதும் ஒரு காரணம் தான். இயற்கையாகவே பெண்களுக்கு வசீகரத் தன்மை இருந்தாலும், இந்த மஞ்சள் அவர்களுக்கு மேலும் வசீகரத் தன்மையை கொடுக்கின்றது. ‘இந்தக் காலத்தில் பல பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது இல்லை. அது வேறு விஷயம்’.

- Advertisement -

அடுத்தபடியாக சமையலுக்கு பயன்படுத்தும் கசகசாவிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்பது தாந்திரீக ரீதியான உண்மை. தொழில் செய்யும் இடத்தில் பூஜை செய்யும் இடத்தில் கட்டாயமாக ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் கசகசாவையும் நிரம்ப வைத்துக்கொள்ளுங்கள்.

kasa-kasa

முந்தைய நாள் இரவே பூஜை அறையில் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் பொடியையும், கொஞ்சமாக கசகசாவையும் சேர்த்து ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலை தொழில் செய்யும் இடத்தை திறந்துவிட்டு முதலில் அந்த இடத்தை கூட்டி சுத்தம் செய்துவிட்டு, இறைவனுக்கு தீப ஆராதனை காட்டி தினசரி பூஜையை முடித்துவிட்டு டம்ளரில் தயாராக இருக்கும் தண்ணீரை உங்கள் கடைக்கு வாசல்படியில் நன்றாக தெளித்துவிட்டு விட வேண்டும்.

kadan

கடைகளுக்கு உள்பக்கத்திலும், மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும். நீங்கள் கடை வைத்திருந்தாலும் சரி, அலுவலகம் வைத்திருந்தாலும் சரி, சொந்தமாக தொழிற்சாலையே வைத்திருந்தாலும் சரி, இந்த சிறிய பரிகாரம் உங்களுக்கு பெரிய பலனை பெரிய லாபத்தை கொட்டிக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களிடம் இருக்கும் துரதிஷ்டம் துரத்தி அடிக்கப்பட்டு, அதிர்ஷ்டம் உள்ளே வருவதற்கு இது ஒரு சிறந்த சுலபமான வசீகர பரிகாரம் முறை. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.