ஒரே குகையில் 3 சித்தர்கள் ஜீவ சமாதி – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

siddhargal

சித்தர்களை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். தமிழ் மக்களின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. சித்தர்கள் பலர் ஜீவ சமாதி அடைந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரே குகையில் ஜீவ சமாதி அடைந்த மூன்று சித்தர்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

siddhar

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சி.என்.பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவில். கடந்த ஆண்டு இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. அப்போது அந்த கோவிலுக்குள் ஒரு பாதாள குகை இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த குகை வழியே சென்று பார்த்தபோது ஒரு மிகப் பெரிய பாதாள அரை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரை கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அறைக்குள், அமர்ந்த நிலையில் மூன்று சித்தர்கள் முக்தி அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

sidhar

பாதாள அறைக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே அந்த அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சித்தர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர். ஜீவ சமாதி அடைய ஏன் இந்த குகையை தேர்ந்தெடுத்தனர். மூன்று சித்தர்களுக்கும் என்ன தொடர்பு இப்படி பல கேள்விகளுக்கான விடையை ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர்.

sidhar

மலைமேல் உள்ள அந்த கோவிலின் பிரதான தெய்வமாக விநாயகர் வீற்றிருக்கிறார். சித்தர்கள் மூலம் இந்த மலை பிரபலம் அடியும் என்று அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவிலை பற்றிய முழுமையான ஆய்வு நடத்தினால் இன்னும் பல ரகசியங்கள் இது குறித்து வெளியில் வர வாய்ப்புள்ளது.