தொண்டையில் அலர்ஜி, புண், சளி பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த சமையலறை பொருட்களை இப்படியும் பயன்படுத்தலாமே!

inji-pattai-throat-pain
- Advertisement -

ஒருவருக்கு எந்த வியாதியும் இல்லை என்றாலும் அடிக்கடி வரும் தலைவலி போல் இருப்பது இந்த சளி பிரச்சனை தான். தீர்வே இல்லாத இந்த சளி பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களே நல்ல நிவாரணியாக செயல்படும். அதிலும் சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு கூடவே தொண்டையில் அலர்ஜி, புண், எரிச்சல் போன்ற தொந்தரவுகள் வந்து பாடாய் படுத்திவிடும். இதற்கான மருந்துகள் நம் சமையலறையிலேயே உள்ளன. அது என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீரை தொண்டை குழியில் படும்படி அங்கேயே நிறுத்தி வைத்து குறைந்த பட்சம் பத்து வினாடிகள் வரை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

- Advertisement -

கால் டீஸ்பூன் கரு மிளகு தூள், சிட்டிகை அளவுக்கு மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அப்படியே உட்கொண்டால் தொண்டையில் இருக்கும் அரிப்பு, அலர்ஜி, கரகரப்பு விரைவாக நீங்கும். இதில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புகள் தொண்டைப் புண்ணை ஏற்படுத்தக் கூடிய தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து ஒரு அங்குல நீளத்திற்கு பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க விடுங்கள். ஒரு கிளாஸ் தம்ளர், பாதி அளவாக சுண்டியதும் அதனை வடிகட்டி வெது வெதுப்பான சூட்டில் பருகி விடவும். ஒரு நாளைக்கு 2 முறை இஞ்சி தண்ணீரை பருகி வந்தால் தொண்டை குழியில் இருக்கும் நோய் கிருமிகள் அழிந்துவிடும்.

- Advertisement -

ஒரு டம்ளர் பாலை நன்கு காய்ச்சி அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். அதில் பனங்கற்கண்டு அல்லது வெல்லத்தை பொடித்து சேர்த்து வெது வெதுப்பாக தொண்டையில் படும்படி குடித்து வந்தால் தொண்டை அலர்ஜி, தொண்டை புண் ஆகியவற்றை உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்பட்டு அழித்துவிடும். ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேன் கலந்து, கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்து வந்தால் தொண்டை வலி ஒருநாளில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஒரு டம்ளர் கொதிக்க வைத்த தண்ணீரில் இரண்டு துண்டு பட்டை, இரண்டு துண்டு கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே குடிக்க பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அழற்சிக்கு எதிராக போராடி தொண்டை சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்யும். மேற்கூறிய விஷயங்களில் உங்களுக்கு எது விருப்பமானதாக இருக்கிறதோ, அவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து இரண்டு நாளைக்கு செய்து பாருங்கள் சளி, தொண்டை வலி போன்ற பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் காணலாம்.

- Advertisement -