செவ்வாய், வெள்ளியில் வாங்க கூடாத இந்த 1 பொருளை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் இதோ!

lakshmi-broom-thudaippam
- Advertisement -

வழிபாட்டிற்கு உரிய செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சில பொருட்களை வாங்குவதை தவிர்க்கின்றனர். சில பொருட்களை வாங்குவதை மகத்துவமாகவும் கருதுகின்றனர். மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வீடு கூட்ட பயன்படும் துடைப்பதிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் ஒன்று உண்டு. இந்த வீடு கூட்டும் துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாங்கலாமா? கூடாதா? அதனை வைக்கக் கூடாத இடங்கள் என்னென்ன? என்பதை சாஸ்திர ரீதியாக நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

vijaya-lakshmi

வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பத்தை ஒரு பொழுது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்பட்டாலும் துடைப்பத்தை அந்த நாட்களில் வாங்குவதை தவிர்க்கவும். அதே போல துடைப்பத்தை கட்டாயம் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது. நீங்கள் மற்றவர்களுடைய பயன்பாட்டிற்கு கொடுத்தாலும் அதனை உடனே திரும்பப் பெற்றுக் விட வேண்டும்.

- Advertisement -

உங்களிடமிருக்கும் துடைக்கும் அடுத்தவர்களுடைய கைகளுக்குச் சென்றால் உங்களிடம் இருக்கும் பணமானது வீண் விரயம் ஆகிவிடும். பழைய துடைப்பத்தை பழைய வீட்டிலேயே விட்டு விட்டு வருவது போன்ற செயல்களை கூட செய்யக் கூடாது. அப்படி செய்தால் லட்சுமியை நாம் அங்கே விட்டு வருவதற்குச் சமமாகும். எனவே பயன்படாத துடைப்பத்தை நீங்களே உங்கள் கைகளால் எரித்து விடுங்கள். அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்கை மட்டும் நீக்கி விட்டு மண்ணில் புதைத்து விடுங்கள். மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விடும்.

broom-thudaippam

வீடு கூட்ட பயன்படும் இந்த துடைப்பத்தை கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது. செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகில் கட்டாயம் துடைப்பத்தை வைத்து கூடாது. துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் செருப்புக்கு பக்கத்தில் வைப்பது மகா பாவமாக கருதப்படுகிறது. வீட்டு வாசலில் செருப்பு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் துடைப்பத்தை வைப்பது உண்டு அது மிகவும் தவறான செயலாகும். துடைப்பத்தை படுக்கை அறையில் வைப்பது, கன்னி மூலையாக கருதப்படும் தெய்வீக மூலையில் வைப்பது என்பதும் தவறான செயல்களாகும்.

- Advertisement -

வீட்டின் வரவேற்பறையில் அனைவரின் கண்களுக்கும் தெரியும் படி துடைப்பத்தை வைப்பதும் தவறு. பணம் வைக்கும் பீரோவிற்கு பின்னால் எல்லாம் சிலர் வைப்பார்கள். அது மிகவும் தவறான செயலாகும். பணம் வைக்கும் இடத்தில் துடைப்பத்தை வைக்கக் கூடாது. துடைப்பத்தை ஒரு கயிறு கட்டி தொங்க விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தரையில் படும்படி வைக்காதீர்கள். பாத்திரம் கழுவும் இடத்திற்கு அருகில் துடைப்பத்தை வைக்கலாம்.

brooms

அதே போல நீங்கள் மின்சார பெட்டியை வைத்து இருக்கும் இடத்திற்கு அருகில் வைக்கலாம் அல்லது கழிவு நீர் செல்லும் வழி அமைந்திருக்கும் இடங்களில் வைக்கலாம் அல்லது பால்கனி அமைந்திருந்தால் அங்கு ஒரு ஓரமாக வைத்து கொள்ளலாம். அந்த இடத்தில் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வைத்து இருந்தால் அதற்கு பின்னால் கூட தாராளமாக வைத்துக் கொள்ளலாம். வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பத்தின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் வைத்திருப்பது மிகவும் சிறப்பானது என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஒரு துடைப்பம் அல்லது மூன்று துடைப்பம் ஆகிய எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தவிர வேறு கிழமைகளில் புதிதாக துடைப்பம் வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -