- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுடைப்பம் வாங்க அதிர்ஷ்ட நாள்

துடைப்பம் வாங்க அதிர்ஷ்ட நாள்

- Advertisement -

வீட்டில் இருக்கும் 108 பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. அந்த வகையில் சுத்தம் செய்யும் துடைப்பத்திலும் மகாலட்சுமி வாசம் செய்கிறார். அதனால் தான் நம் முன்னோர்கள் துடைப்பத்தை யாருடைய கால்களிலும் படாத படி கூட்டி பெருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இந்த துடைப்பத்தை எந்த நாளில் வாங்கினால் துரதிர்ஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் வரும்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா? இல்லையா? என்பதை சில விஷயங்களை வைத்தே நாம் கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு ஒரு அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டு போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இருக்கும் மூவர் அல்லது நால்வர் பேரில் போட்டால் ஒருவருக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் வரும். மற்றவர்களுக்கு எதிர்பார்த்த பொருள் கிடைக்கவே கிடைக்காது.

- Advertisement -

அந்த இருவர் வீட்டில் துரதிர்ஷ்டம் தரக்கூடிய செயல்களை செய்கிறார்கள் என்று அர்த்தம். அந்தி சாயும் நேரத்தில் வீட்டை பெருக்குவது, நகத்தை கடித்து துப்புவது, நடு வாசலில் உட்காருவது என்று ஏதாவது ஒரு தரித்திரம் தரும் செயலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. அதிர்ஷ்டம் நம் பிறப்பில் இல்லை, நம் செயலில் தான் இருக்கிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. நல்ல செயல்களையும், நல்ல சிந்தனைகளையும் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

தனக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டாம் என்றாலும் தேடி வரும். தனக்கு போகத்தான் தானமும், தர்மமும் என்பவர்களுக்கு கூட அதிர்ஷ்டம் ஓரளவுக்கு எட்டிப் பார்க்கும். ஆனால் கஞ்சனாய் இருப்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. இந்த துடைப்பத்தை யாருக்கும் அறியாமலும் கடனாகவோ, தானமாகவோ கொடுக்கக் கூடாது. துடைப்பம் உடைந்தால் உடனே மாற்றி விட வேண்டும். தேய்ந்த துடைப்பத்தை வைத்து காலத்தை ஓட்டக்கூடாது. இத்தகைய துடைப்பத்தை புதிதாக வாங்க நினைப்பவர்கள், சனிக்கிழமையில் சென்று வாங்குங்கள். சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கினால், உங்களை துரத்திக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

வாங்கிய துடைப்பத்தை ஒருபோதும் சாய்த்து வைக்கக் கூடாது. நேராக நிமிர்த்தி தான் வைக்க வேண்டும். துடைப்பம் வீட்டிற்கு வருபவர்களுடைய கண்களில் படாதவாறு மறைத்து வைக்க வேண்டும். அன்னபூரணி வாசம் செய்யும் சமையல் செய்யும் இடத்தில் துடைப்பத்தை வைக்கக் கூடாது. துடைப்பம், முறம் போன்றவற்றை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் தூசுகள், முடிகள் போன்றவை இருந்தால் துரதிர்ஷ்டம் கண்டிப்பாக உங்களை துரத்தும்.

இதையும் படிக்கலாமே:
பிரச்சனைகள் தீர சமையலறை பரிகாரம்

வீட்டைக் கூட்டி பெருக்கும் பொழுது யாருடைய உடம்பிலும் துடைப்பம் படாமல் நிதானமாக குனிந்து பெருக்க வேண்டும். நிமிர்ந்து கொண்டே துடைப்பத்தை பிடித்துக் கொண்டு வீட்டை கூட்டுபவர்களுக்கு சோம்பேறித்தனம் தான் முதல் எதிரியாக வாழ்க்கையில் மாறும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருவதற்கு, இதை எல்லாம் மாற்றி செய்து பாருங்கள். லக்ஷ்மி கடாட்சம் பெருகுவதை உணர முடியும். புதிதாக வாங்கிய துடைப்பத்தில் இருந்து கொட்டும் துகள்கள் வீட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல! இது மூச்சு திணறலை ஏற்படுத்த கூடும், எனவே முதலில் வாங்கியவுடன் சொரசொரப்பான தரைப்பகுதியில் தேய்த்து துகள்களை எடுத்து விடுங்கள். அதன் பிறகு பயன்படுத்தி பாருங்கள், பிரச்சனை நிவர்த்தியாகும். பழைய தேய்ந்து போன துடைப்பத்தை தூக்கிப் போடக்கூடாது துடைப்பத்தை எரித்து விடுங்கள்.

சற்று முன்