தலையணைக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினாலே போதும். உங்களுடைய மனது நிம்மதி அடையும். மனக்குழப்பம் நீங்கி இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

sleepless
- Advertisement -

மனிதர்களுடைய மனக்குழப்பத்திற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அந்த குழப்பம்தான் ஒருவருடைய மன நிம்மதியை கெடுக்கும். மன நிம்மதி கெட்டு விட்டால், தானாக இரவு தூக்கம் கெட்டுப் போகும். இரவு தூக்கம் இல்லை என்றால் உடலில் ஏகப்பட்ட வியாதிகள் வந்து சேர்ந்துவிடும். இரவு தூக்கம் இல்லை என்றால், பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு கூட பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இரவு நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும். மனதை அமைதிப்படுத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய சில விஷயங்களை இங்கே நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

night-sleep

இரவில் தூங்கச் செல்லும் போது நமக்கு நடந்த கெட்ட விஷயங்களை நினைவு படுத்த கூடாது. நமக்கு நடந்த, நல்ல விஷயங்களை நம்முடைய மனதிற்குப் பிடித்த சில விஷயங்களை நினைத்து கொண்டே தூங்க செல்ல வேண்டும். தூக்கம் வருவதற்கு இது ஒரு நல்ல வழி. அடுத்தபடியாக ஆன்மீக ரீதியாக பார்த்தோமேயானால் மனதிற்கு உறுதியை தரக்கூடிய அனுமனை மனதார நினைத்து கொண்டு தூங்க சென்றாலும், எந்த ஒரு கெட்ட எண்ணமும் நம்மை வந்து தொல்லை கொடுக்காது. நிம்மதியான தூக்கம் வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், இயற்கையாகவே நம்முடைய மனதை அமைதிப்படுத்த கூடிய ஒரு பொருள் இருக்கின்றது. அந்த ஒரு பொருள் என்ன? அந்தப் பொருளில் இருந்து வரக்கூடிய வாசத்தை நாம் சுவாசித்தோமே ஆனால் நம்முடைய மனது நம்மை அறியாமலேயே அமைதி அடையும். மனக்குழப்பம் நீங்கும். மனபயம் நீங்கும். தானாக நல்ல தூக்கம் கிடைக்கும்.

vepam-poo

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உழைத்தாலும், எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும் வேப்ப மரத்து நிழலில் கட்டிலை போட்டு உறங்க தொடங்கினால் நன்றாக தூங்குவார்கள். வேப்ப மரத்தின் நிழலில் தூங்கினால் நல்ல காற்று வரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்‌. ஆனால் அந்த வேப்பமரத்து பூவியிலிருந்து கிடைக்கக் கூடிய காற்றை சுவாசிப்பதன் மூலம் நம்முடைய மன அழுத்தமும் நீங்கும். மன அழுத்தம் நீங்கும் போது தூக்கமும் நன்றாக வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம் மனதை அமைதிப்படுத்த கூடிய சக்தி வேப்ப மரத்தின் பூவிற்கு இயற்கையாகவே உள்ளது.

- Advertisement -

உங்களுக்கு வேப்ப மரத்திலிருந்து பூக்கள் கிடைத்தால் அதை சேகரித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் வேப்பம்பூ கிடைக்கின்றது. அதிலிருந்து சிறிதளவு வேப்பம் பூவை வாங்கி நன்றாக உலர வைத்து, அதில் கொஞ்சமாக சாதாரண கற்பூரத்தை தூள் செய்து கலந்து, ஒரு சிறிய முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

sudam1

இந்த முடிச்சினை உங்களுடைய தலையணைக்கு அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்து வரும் வாசத்தை தூங்கும் போது நாம் சுவாசித்தால் நம்முடைய மன பயம் நீங்கி, மன அழுத்தம் நீங்கி மனம் தெளிவு பெற்று இரவு நேரத்தில் நல்ல தூக்கம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஆன்மீக ரீதியாக முயற்சி செய்தாலும் சரிதான், ஆரோக்கிய ரீதியாக முயற்சி செய்து பார்த்தாலும் சரி தான், அது உங்களுடைய இஷ்டம். ஆனால் நல்ல பலன் கிடைப்பது மட்டும் உறுதி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -