ஜோதிடம் : துலாம் லக்னக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகச் செய்யும் முறைகள்

thulam
- Advertisement -

இந்த பூலோகத்தில் அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவித்து சலித்த மனம் தான் ஆன்மீகத்தில் உயர்நிலையை நோக்கி செல்லும் என்பது ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. பூமியில் உயிர்கள் எல்லாவற்றிற்கும் சுகங்களை அருளும் நவக்கிரக நாயகனாக சுக்கிர பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் அந்த சுக்கிர பகவானுக்குரிய ராசியாக துலாம் ராசி இருக்கிறது. துலாம் ராசியில் பிறந்தவர்கள் அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவிக்கின்ற விதி அமைப்பை இயற்கையாகவே பெற்றவர்களாக இருக்கின்றனர். எனினும் துலாம் ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியாக இருக்கும் கிரகத்தின் அருளைப் பெறுவதற்கே செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகக் கட்டத்தில் இருக்கும் 12 ராசிகளில் ஏழாவதாக வருகின்ற ராசி துலாம் ராசியாகும். இந்த துலாம் ராசிக்கு அதிபதியாக சுகங்களுக்கு நாயகனான சுக்கிர பகவான் இருக்கிறார். துலாம் ராசி சுக்கிர பகவானின் ஆட்சி வீடாகும். ஒரு நபரின் ஜாதகத்தில் இந்த துலாம் ராசியிலேயே சுக்கிரன் அமையப் பெற்றிருந்தால் சுக்கிரபகவான் அவரது வாழ்வில் பல யோகங்களை நிச்சயம் ஏற்படுத்தித் தருவார்.

- Advertisement -

ஜாதக கட்டத்தில் துலாம் ராசிக்கு 9 ஆவது வீடாக வருவது மிதுனம் ராசியாகும். மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவானாவார். புதன் பகவானும், சுக்கிர பகவானும் சமமான உறவு கொண்ட கிரகங்கள். எனவே துலாம் ராசிக்கு புதன் பகவானால் பொருளாதார ரீதியாக சிறிதளவு நன்மைகள் உண்டாகும். ஆயினும் புதன் பகவானால் மிகுதியான நன்மைகளைப் பெறுவதற்கு துலாம் ராசியினர் கீழ்கண்ட பரிகாரங்களை முறையாகச் செய்து வருவதால் நல்ல பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

budhan

துலாம் ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு யோகாதிபதியாக இருக்கும் புதன் பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பச்சை வண்ண ஆடைகள் அணிந்து கொள்வது நன்மை தரும். புதன்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் இருக்கும் புதன் பகவானுக்கு பச்சை பயிர்களை சமர்ப்பித்து, வழிபாடு செய்து வருவதால் புதன் பகவானின் முழுமையான அனுக்கிரகம் துலாம் ராசி மற்றும் லக்னகாரர்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

Thulasi

உங்கள் வீட்டில் புதன் கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசி இலைகள் மற்றும் வெற்றிலையை இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் கோவில்களுக்கு பச்சை பயிறு தானியங்கள், துளசிமாலை, வெற்றிலைகள் போன்றவற்றை நிவேதனப் பொருட்களாக தருவதால் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
மிதுன லக்னக்காரர்களுக்கு இந்த கிரகங்களால் வருமானம் பெருகும் தெரியுமா?

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thulam lagnam yogam in Tamil. It is also called as Thulam rasi in Tamil or Rasi pariharam in Tamil or Jothida pariharam in Tamil or Thulam rasi pariharam in Tamil.

- Advertisement -