மிதுன லக்னத்தார்களுக்கு இந்த கிரகங்களால் வருமானம் பெருகும் தெரியுமா?

gemini-mithunam

உலகில் எதுவுமே இலவசம் கிடையாது என்பதற்கு சிறந்த உதாரணம் நமது உழைப்பு தான். நாம் எந்த ஒரு வேலையை அல்லது தொழில் செய்வதால் அதனால் பலனடைபவர்கள் பிரதிபலனாக நமக்கு தருவது தான் பணம் என்கிற செல்வம். பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு வேலை சென்று, தொழில் செய்து பணம் ஈட்டினாலும், அனைவராலும் அவர்களின் தேவைக்கதிகமான அளவில் ஈட்ட முடியாமல் சராசரி அளவிலேயே வருமானம் ஈட்டுகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் ஜாதகத்தில் ஏற்படும் கிரகங்களின் அமைப்பை வைத்து வேலை, தொழில் போன்றவை அமையும் எனக் கூறுகிறது. அந்த வகையில் மிதுன ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை பொருத்து அமையும் தொழில்கள், வேலை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Midhunam

மிதுன ராசிக்கு செல்வத்தை அள்ளி தரும் கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். எனவே மிதுன ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு ஜாதகத்தில் சந்திரன் கிரகம், புதன் கிரகத்தோடு சேர்ந்திருந்தால் கட்டடங்களுக்கு குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் குடிநீர் விநியோகம் செய்தல், மருத்துவ மூலிகை கசாயம் தயாரிப்பு, பெண்கள் கல்வி நிலையம், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல், நெசவுத்தொழில், நிலத்தடி நீர் ஆய்வு, சிறப்புக் கல்வி பயிற்சி, விவசாய தொழில் போன்றவற்றின் மூலம் மிகுதியான லாபங்கள் ஏற்படும்.

ஜாதகத்தில் எந்த ஒரு இடத்திலும் சந்திரன், சுக்கிரன் கிரகங்கள் சேர்ந்து எங்கே இருந்தாலும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, பெண்கள் சுய உதவிக்குழு, ஆடை, அணிகலன் தயாரிப்பு, ஒப்பனை அலங்காரம், நாட்டியப்பள்ளி, இரத்தின வியாபாரம், வீடு வாகனங்களில் முதலீடு செய்யும் தொழில், மது விற்பனை, வாசனை திரவியங்கள், உணவு தயாரிப்பு போன்ற துறைகளில் நல்ல வருமானம் கிடைக்கும்.

budhan

மிதுன ராசி, லக்னக்காரர்களுக்கு ஜாதகத்தில் எந்த ஒரு இடத்திலும் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் சேர்க்கை பெற்றால் பெண்களுக்கான சிறப்பு மருத்துவர், வழக்கறிஞர், கார வகையான உணவுகள் தயாரிப்பு, ரத்தப் பரிசோதனை நிலையம், கடன் கொடுத்தல், பங்குச்சந்தை, கட்டடங்கள், வாகனம் வாடகைக்கு விடுதல், நில விற்பனை போன்ற தொழில்களால் லாபங்கள் ஏற்படும்.

- Advertisement -

sevvai

ஜாதகத்தில் சந்திரன், குரு சேர்க்கை பெற்றால் திருமண ஏற்பாடுகள் ஒப்பந்த நிறுவனம், கடல் கடந்து வியாபாரம், பொருட்கள் ஏற்றுமதி, ஆன்மீக சொற்பொழிவு, விவசாய தொழில், தொழில் மேம்பாட்டு நிறுவனம், வெளிநாட்டு கல்வி நிறுவனம் போன்ற வகைகளில் பணவரவுகள் உண்டாகும்.

Lord-Chandra

சந்திரன், சனி கிரகங்கள் சேர்க்கை பெற்று ஜாதகத்தில் எங்கிருந்தாலும் ஜனன – மரண பதிவு செய்யும் துறை, சுரங்கத்தொழில், அகழ்வாராய்ச்சி, தாதுக்கள் பிரித்தெடுத்து விற்பனை, மோட்டார்கள் தயாரிப்பு, கிணறு வெட்டுதல், ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆகியவற்றின் மூலம் வருமானம் உண்டாகும்.

suriyan

மிதுன ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் சந்திரன் மற்றும் சூரியன் சேர்க்கை பெற்றால் அரசு தகவல் துறை, அரசு இதய அறுவை சிகிச்சை மருத்துவர், கடற்படை தளபதி, குடிநீர் வாரிய தலைவர், விவசாய சங்க தலைவர், பால் பண்ணை அமைத்தல், காடுகள் வளர்ப்பு, மீன்கள் உற்பத்தி போன்றவற்றின் மூலம் நிலையான வருமானம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
நாடி ஜோதிடத்தில் துல்லியமான பலன் கூறப்படுவதன் ரகசியம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mithunam varumanam in Tamil. It is also called as Mithuna rasi palan in Tamil or Mithuana lagnam palan in Tamil or Jathaga palangal in Tamil or Mithuna rasi Mithuna lagnam in Tamil.