உங்கள் வீட்டில் துளசி செடி வளர்த்து வந்தால் கட்டாயம் இதையும் தெரிஞ்சு வைச்சுக்கோங்க! துளசியுடன் இந்த செடியும் இருந்தால் இவ்வளவு நன்மைகளா?

thulasi-cash
- Advertisement -

பொதுவாக ஒரு வீட்டில் துளசி வைத்திருப்பவர்களுக்கு பரிபூரண தெய்வ அருள் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. சாதாரணமாக துளசியை எல்லோருடைய வீடுகளிலும் எளிதாக வளர்த்து விடலாம். மளமளவென வளரக்கூடிய இந்த துளசி இலையில் மருத்துவ குணமும், ஆன்மீக குணங்களும் எண்ணற்றவை அடங்கியுள்ளன. அத்தகைய துளசிச் செடியுடன் இந்த ஒரு செடியையும் சேர்த்து வளர்த்தால் அள்ள அள்ள குறையாத செல்வ மழை பொழியும் என்கிறது ஆன்மிக சாஸ்திரம். அந்த வகையில் அது என்ன செடி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

karunthulasi2

ஒருவருடைய இல்லத்தில் துளசி செடியை புனிதமாகக் கருதி அதனை பாதுகாத்து வழிபாடுகள் செய்து வந்தால் அந்த இல்லத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். அத்தகைய புனிதமான இந்த துளசி செடியை வட கிழக்கு அல்லது வடக்கு திசையில் நடப்பட வேண்டும் என்பது விதியாகும். துளசி செடியை வீட்டின் பின்புறம் வளர்ப்பது, ஜன்னலுக்கு அருகில் வைத்து வளர்ப்பது, பால்கனியில் வளர்ப்பது போன்ற விஷயங்களை கடைபிடித்து வருகிறார்கள். சரியான திசையில் வைத்து வளர்க்கப்படும் இந்த துளசி செடிக்கு மகத்துவங்கள் அதிகம்.

- Advertisement -

துளசி செடிகளில் ஸ்ரீ துளசி, ராமர் துளசி, கருந்துளசி என்று பல்வேறு வகைகளும், பெயர்களும் இருந்தாலும் நமக்கு சாதாரண துளசியை தான் தெரியும்! அப்படி இருக்கும் இல்லங்களில் துளசியுடன், கருந்துளசி என்கிற கருப்பு நிறத்தில் இருக்கும் துளசியையும் சேர்த்து வளர்ப்பது இன்னும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்குமாம். கருந்துளசி அவ்வளவு சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும் வளர்ந்து விடக் கூடிய ஒரு துளசி வகை அல்ல எனினும் துளசிச் செடியுடன் கருந் துளசியை வளர்த்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை கூறப்படுகிறது.

karunthulasi

கருந்துளசி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத தன்மையை கொண்டுள்ளது. சுத்தமான இடங்களிலும், சுத்தமான தண்ணீர் இருக்கும் இடங்களிலும் வளரக்கூடிய இந்த கருந்துளசியை நீங்கள் உங்கள் வீட்டில் துளசிச் செடியுடன் சேர்த்து வளர்த்து வரலாம். வீட்டின் பின்புறம் அல்லது பக்கவாட்டு பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். வீட்டிற்கு நேர் எதிரே, நிலை வாசலுக்கு நேர் எதிரே வைத்து வளர்ப்பது கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கருந்துளசி விஷ்ணு பகவானுக்கு நிகராக கருதப்படுவதால் இதனை கால்களில் மிதித்து விடக் கூடாது. உயிராற்றல் நிறைந்துள்ள இந்த செடி வகைகள் வீட்டில் இருந்தால் வீட்டிற்கும் உயிராற்றல் கிடைக்கும் இதனால் குடும்பத்தில் நிலவும் நிறைய குழப்பங்கள் தீர்வதாக ஐதீகம் உண்டு. துளசி செடி வீட்டில் வாடி போனால் அந்த வீட்டில் அபசகுணமாக ஏதாவது நடக்கும் என்று நம் முன்னோர்கள் கருதி வந்தனர். அந்த அளவிற்கு துளசியை புனிதமாக கருதிய நம் முன்னோர்களுக்கு துளசியின் மகத்துவங்கள் நிறையவே தெரிந்து இருந்தன.

thulasi

துளசிச் செடி எந்த அளவிற்கு ஒரு வீட்டில் செழிப்பாக வளர்கிறதோ! அந்த வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் நடக்கும். அத்துடன் இந்த கருந்துளசியையும் சேர்த்து வளர்த்து வந்தால் தடைப்பட்ட சுப காரியங்களும் எளிதாக நடைபெறும் எனவே உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் ஈடேற கருந்துளசியை வளர்த்து வருவது சிறந்த பலன்களை கொடுக்கும். மூலிகைகளின் மகாராணியாக விளங்கும் இந்த துளசி இலைகளை தினமும் ஒன்றிரண்டு மென்று சாப்பிட்டு வந்தால் சர்வ ரோக நிவாரணியாகவும் செயல்படும்.

- Advertisement -