துளசி இலைகள் 1 கைப்பிடி இருந்தால் ஒரு முறை அருமையான ஆரோக்கியமான சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.

thulasi-chutney1_tamil
- Advertisement -

துளசி இலைகள் பக்திக்கு மட்டும் அல்லாமல், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக்கூடிய இந்த துளசி இலையை சட்னி வைத்தும் சாப்பிடலாம். ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கக் கூடிய இந்த துளசி சட்னி ரெசிபி இதே அளவுகளில், இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இட்லி, தோசைக்கு தொட்டுக்க ரொம்பவே சுவையாக இருக்கும். துளசி சட்னி எளிதாக அரைப்பது எப்படி? பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

  • துளசி – ஒரு கைப்பிடி அளவிற்கு
  • சின்ன வெங்காயம் – 25
  • பெரிய தக்காளி பழங்கள் – இரண்டு
  • பூண்டு – நாலு பற்கள்
  • இஞ்சி – ரெண்டு இன்ச்
  • கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் – நான்கு
  • துருவிய தேங்காய் – கால் கப். தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • வர மிளகாய் – ஒன்று
  • பெருங்காயத்தூள் – ரெண்டு பின்ச்

செய்முறை

முதலில் துளசி இலைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு பறித்து நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். முதலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு அதில் நீங்கள் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து லேசாக சுருள வதக்க வேண்டும். ரொம்பவும் துளசி இலைகளை வதக்க கூடாது. எண்ணெயில் சுருண்டு வந்தால் போதும் எடுத்து விடலாம்.

- Advertisement -

பின்னர் அதே வாணலியில் மீண்டும் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். இஞ்சி, பூண்டு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பருப்பு பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது காம்பு நீக்கிய வர மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள். ஒரு ரெண்டு நிமிடம் இவற்றை வதக்கிய பின்பு முழுதாக உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு சுருங்க வதங்க வேண்டும்.

பாதி அளவிற்கு வெங்காயம் வதங்கி வரும் பொழுதே தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். இதை மசிய வதங்க தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறியதும் நீங்கள் எடுத்து வைத்துள்ள துளசி இலை மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரே மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்புடன் இருக்கும் பொழுது சுவையாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு மசாலா வறுவல் இப்படி செஞ்சு பாருங்க எல்லா வகையான வெரைட்டி ரைஸ்க்கும், சாதத்துக்கும் கூட செம டேஸ்டியாக இருக்குமே!

இதற்கு தாளிக்க, தாளிப்பு கரண்டியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க, இது இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மிகுந்ததும் கூட, நீங்களும் இதே மாதிரி துளசி சட்னி ரெசிபி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -