உருளைக்கிழங்கு மசாலா வறுவல் இப்படி செஞ்சு பாருங்க எல்லா வகையான வெரைட்டி ரைஸ்க்கும், சாதத்துக்கும் கூட செம டேஸ்டியாக இருக்குமே!

potato-fry1_tamil
- Advertisement -

உருளைக்கிழங்கு மசாலா வறுவல் தேங்காய் சாதம், புளி சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். இதே அளவுகளில் உருளைக்கிழங்கு மசாலா ஒரு முறை செஞ்சு பாருங்க, ருசி அபாரமாக இருக்கும். டேஸ்டியான உருளைக்கிழங்கு மசாலா வறுவல் ரெசிபி எப்படி செய்வது? அப்படின்னு தொடர்ந்து தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 300 கிராம்
  • சீரகம் – கால் ஸ்பூன்
  • சோம்பு – 1/4 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
  • நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு

செய்முறை

உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு உருளைக் கிழங்குகளை எடுத்து தோல் சீவி கழுவி சுத்தம் செய்து சதுர சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரெண்டு நிமிடம் வதக்கியதும் நீங்கள் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை எண்ணெயில் அப்படியே சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கி விட வேண்டும். இதை நாம் வேக வைக்காததால் எண்ணெயிலேயே வேகுவதற்கு சிறிது நேரம் எடுக்கும் எனவே அடுப்பை கூட்ட வேண்டாம். வறுவலுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.

உருளைக்கிழங்கு பாதி அளவிற்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி விடுங்கள். மசாலா வாசம் போக நன்கு வதக்க வேண்டும். ரெண்டு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் மற்றும் ஆவியிலேயே உருளைக்கிழங்கு நன்கு வெந்து வந்து விடும். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் பொழுது குழம்பு மிளகாய்த்தூள் பயன்படுத்துவதை விட, தனி மிளகாய் தூள் பயன்படுத்தும் பொழுது ருசி அதிகமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கேரளத்து மண்வாசனை மாறாத கடலை கறி இப்படித்தான் செய்யணும். கேரளாவுக்கே போய் ஆப்பத்தோடு, கடலை கறி சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

கூடுதலாக கறி மசாலா அல்லது கரம் மசாலா ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள், அட்டகாசமான சுவையில் நிச்சயம் இருக்கும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு வேகவிட்ட பின்பு மூடியை திறந்து நறுக்கிய மல்லி தழையை தூவி ஒரு பிரட்டு பிரட்டி விடுங்கள். கடைசியாக கொஞ்சம் மிளகுத்தூள் தூவி ஒரு பிரட்டு பிரட்டி மூடி வைத்து விடுங்கள். நீங்கள் எந்தவிதமான வெரைட்டி ரைஸ் உடனும் இதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டாலும், அட்டகாசமாக இருக்கும். மேலும் ரசம், சாம்பார், தயிர் சாதம் போன்றவற்றுக்கும் கூட செம காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு மசாலா வறுவல் ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -