வீட்டில் மகாலட்சுமியின் சொரூபமாக நடமாடிக் கொண்டிருப்பவள் பெண். அவளுடைய வழிபாடு மட்டும்தான் அந்த வீட்டு கஷ்டங்களை போக்கும். இதில் ஒரு துளி சந்தேகமும் கிடையாது. உங்களுடைய குடும்பம், நீங்கள், உங்கள் கணவர், உங்களுடைய பிள்ளைகள் இப்படி யாருமே, எந்த தேவைக்காகவும் அடுத்தவர்களிடம் கையேந்தக்கூடாது.
உங்களுக்கான விஷயங்கள், உங்களுக்கு தானாக நடக்க வேண்டும். உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் தானாக வரவேண்டும். கஷ்டங்கள் வறுமை என்பது உங்கள் வீட்டில் நிலையாக தங்கக்கூடாது என்றால் பெண்களாகிய நீங்கள், இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்யுங்கள். உங்கள் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியமும் அப்படியே தாண்டவமாட தொடங்கிவிடும். அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
துளசித் தாய் வழிபாடு
துளசித்தாய் தான் இதற்கு உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும். துளசிச்செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த செடி வாடாமல் செழிப்பாக எந்த வீட்டில் வளர்கிறதோ, அந்த வீட்டில் செல்வ செழிப்புக்கு குறைவே இருக்காது. செடி செழிப்பாக வளர வேண்டும் என்றால் அந்த செடியை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.
உங்களுடைய வீட்டிலும் ஒரு துளசி செடியை வாங்கி வையுங்கள். இதை பராமரிப்பது பெரிய அளவில் சிரமம் கிடையாது. சுத்த பத்தமாக அந்த துளசி செடியை தொட வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் முடிந்தால், காலை நேரத்தில், இல்லை என்றால் மாலை நேரத்தில் ஒரு மண் அகல் விளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி அந்த துளசி மாதாவை வணங்குங்கள்.
உங்கள் குடும்பம் செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. அந்த செடி எந்த அளவுக்கு செழிப்பாக வளர்ந்து கொண்டே செல்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய குடும்பமும் மென்மேலும் வளர தொடங்கும்.
வெள்ளி செவ்வாய் என்றால் அந்த துளசி செடியை மஞ்சள் பூசி குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். அந்த துளசி செடிக்கு முன்பு சின்னதாக கோலம் போட வேண்டும் அவ்வளவுதான். விளக்கு மட்டும் தினமும் ஏற்றி விடுங்கள். இந்த நெய் விளக்கு உங்களுடைய வீட்டை எந்த அளவுக்கு மேலே உயர்த்தி தரும் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. 48 நாள் இந்த விளக்கை ஏற்றிப் பாருங்கள்.
உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் அந்த குழந்தையை இந்த வழிபாட்டை செய்யச் சொல்லுங்கள். மேலும் மேலும் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய குடும்பம் தீராத துன்பத்தில் என்றுமே விழாது. எனக்கு இந்த பிரச்சனை, உங்கள் வீட்டில் இருப்பவர்கள் யாரிடமும் போய் கையேந்தி நிற்கவே மாட்டார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் உண்டான தீர்வையும் அந்த மகாலட்சுமி தேவி உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பாள்.
இதையும் படிக்கலாமே: குழந்தை வரம் தரும் வாராஹி வழிபாடு
இந்த கஷ்டம் வந்துவிட்டதே இதிலிருந்து எப்படி வெளி வருது என்று யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கஷ்டத்திற்கான தீர்வு கண்முன்னே வந்து நிற்கும். அதுதான் துளசி செடியில் இருக்கக்கூடிய மகத்துவம். துளசி செடி வழிபாட்டிற்கு இருக்கக்கூடிய மகத்துவம். மறக்காதீங்க, இதை செஞ்சு வந்தீங்கன்னா உங்க குடும்பம் நல்லா இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.