திருமணம் விரைவில் நடைபெற, செல்வம் பெருக வீட்டில் துளசி கல்யாணம்

thulasi
- Advertisement -

நம் வீட்டில் வளர்க்கும் துளசிச் செடிக்கு தினந்தோறும் பூஜை செய்து விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானது. ஆனால் அந்த துளசி தாய்க்கு நம் வீட்டில் திருமணம் செய்வது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. நம் வழக்கப்படி நாள் நட்சத்திரம் நல்லநேரம் இவைகளைப் பார்த்து செய்யப்படுவதுதான் திருமணம். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி தான் கைசிக ஏகாதசி என்று கூறுவார்கள். இந்த ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையான மகத்துவம் கொண்டது. அதாவது, கார்த்திகை மாத சுக்லபக்ஷ் கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி தினத்தை “பிருந்தாவன துவாதசி” என்று கூறுவார்கள். இந்த நாளில்தான் துளசி தாயார் விஷ்ணுவை மணந்து கொண்டார், என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த தினத்தில் நம் வீட்டில் துளசி தாயாரை விஷ்ணுவுடன் திருமணக்கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

thulasi chedi

துளசி கல்யாண பூஜையை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளை எப்படி ஒன்றுகூடி கொண்டாடுகின்றோமோ அதேபோல், இந்த துளசி கல்யாண பூஜையையும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தும்போது அதில் நமக்கு கிடைக்கக்கூடும் பாக்கியமானது இன்னும் கூடுதலாக இருக்கும்.

- Advertisement -

பூஜை செய்யும் முறை

துளசி செடியாக வைத்திருந்தாலும், துளசிமாடமாக இருந்தாலும், முதலில் அதனை மெழுகி சுத்தம் செய்து, பின்பு வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அரிசிமாவில் கோலம் போட்டு, பூச்சூட்டி உங்களால் முடிந்த வரை, ஒரு மணப்பெண்ணிற்கு அலங்கரிப்பது போல் அலங்காரத்தை முதலில் மேற்கொள்ள வேண்டும். அடுத்து இந்த துளசி செடிக்கு பக்கத்தில் விஷ்ணுவின் படமோ, அல்லது கிருஷ்ணனின் படமோ இவை இரண்டும் இல்லாவிட்டால் ஒரு நெல்லி மரத்தின் குச்சியை யாவது வைக்க வேண்டும். நெல்லி மரத்தின் குச்சியானது விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது.

- Advertisement -

Thulasi

துளசியையும், விஷ்ணுவையும் மணக்கோலத்தில் அலங்கரித்து விட்டு, பின்பு நம்மால் முடிந்த நைய்வேதியத்தை சமர்ப்பித்து, விளக்கு ஏற்றி, தீப தூப ஆராதனையுடன் இந்த துளசி தாயினை வழிபட வேண்டும். இந்தத் துளசி திருமண பூஜைக்கு நம் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து பூஜையில் கலந்துகொள்ள செய்து, அவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கப்பட்டு வழி அனுப்பி வைப்பது என்பது மேலும் நன்மையை தரும்.

துளசியின் அடிபாகத்தில் சிவபெருமானும், துளசியில் மத்தியில் மகாவிஷ்ணுவும், துளசியின் நுனியில் பிரம்மனும் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

thulasi

இதுவரை துளசிச் செடியை வீட்டில் வைக்காதவர்கள் கூட இந்த பிருந்தாவன துவாதசி அன்று, புதிதாக துளசி செடியை வாங்கி, திருமண பூஜையை நடத்திவிட்டு, இந்த நாளில் இருந்து துளசி செடியை உங்கள் வீட்டில் வளர்க்க ஆரம்பிக்கலாம். அது உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பட ஏதாவது தடை இருந்தாலும், அந்த தடையானது நிவர்த்தி செய்யப்படும். துளசி மகாலட்சுமியின் அம்சமாக இருப்பதால் உங்கள் வீட்டில் செல்வ வளமும் பெருகும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு தினமும் துளசி செடிக்கு தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வந்து பூஜை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே
ரகசியத்தினுள் ரகசியம் முனிவர் அருளிய லலிதா சஹஸ்ரநாமம்.

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thulasi kalyanam. Tulsi pooja procedure. Tulasi pooja benefits.

- Advertisement -