ரகசியத்தினுள் ரகசியம் முனிவர் அருளிய லலிதா சஹஸ்ரநாமம்.

lalithambikai-compressed

லலிதா சஹஸ்ரநாமம் என்றால் என்ன. அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது தான் லலிதா சஹஸ்ரநாமம். “சஹஸ்ர” என்றால் ஆயிரம். “நாமம்” என்றால் பெயர்கள். லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வது தான் இந்த லலிதா சகஸ்ர நாம பூஜை. முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் மற்றும் அம்மனின் ஆசியை பெற்றவர்களால் மட்டுமே இந்த லலிதா சஹஸ்ர நாமத்தை உச்சரிக்க முடியும்.

Lalithambikai

மகாவிஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவர் உபதேசம் செய்ய, அகத்திய முனிவர் உபதேசமாக பெறப்பட்டது தான் இந்த லலிதா சஹஸ்ரநாமம். பிரம்ம தேவனிடம் இருந்து வேதங்களை அசுரன் ஒருவன் திருடிக் கொண்டு சென்ற போது மகாவிஷ்ணு ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வந்து அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உபதேசம் பெற்ற அகத்திய முனிவரும் சாதாரணமானவர் அல்ல.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோது விஷ்ணு, பிரம்மன், இந்திரன், ஆகிய முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே இடத்தில் கூடினார்கள். அந்த சமயத்தில் நம் பூமியானது ஒரு பக்கம் தாழ்வாகவும், மறுபக்கம் மேடாகவும் ஆகிவிட்டது. அந்த சமயம் சிவபெருமான் பூமியை சமமாக்க அகத்தியரை அழைத்து கூறியது இது தான். “பூமியின் மற்றொரு பகுதிக்கு தாங்கள் சென்று சமநிலை படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அகத்தியரும் பூமியின் மற்றொரு பக்கத்திற்கு சென்று பூமியை சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதன் அர்த்தத்தை உணர முடிகின்றதா.

Sivan-God

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், சக்திவாய்ந்த தெய்வங்களுக்கெல்லாம் சமமான ஒருவர்தான் இந்த அகத்தியர்.

- Advertisement -

மகாவிஷ்ணுவின் அம்சமான, ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகத்தியர் இந்த லலிதா ஸஹஸ்ரநாம உபதேசத்தை பெற்றிருக்கின்றார் என்றால் அது எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். நாம் செய்யும் பாவங்களில் இருந்து விமோசனம் அடைவதற்கான நேரம் வரும்போது தான் இந்த லலிதா சகஸ்ர நாமத்தை உச்சரிக்கும் பாக்கியம் ஒருவருக்கு கிடைக்கும்.

அடுத்ததாக லலிதா சகஸ்ரநாமத்தை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மகா திரிபுரசுந்தர சுந்தரியான  அன்னை லலிதாம்பிகை சிவனோடு ஒன்றாக இணைந்த சிவசக்தி ரூபம் கொண்டவள். இவளுக்கு மேலான சக்தி இந்த உலகில் இல்லை. இதில் லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்தின் விழிப்புணர்வும், பிரபஞ்சத்தின் படைப்பில் உள்ள ரகசியங்களும் அடங்கும்.

agathiyar

ஹயக்ரீவர் அகத்தியருக்கு எப்படித்தான் இதை உபதேசம் செய்து இருப்பார் என்று கேட்டால், ஹயகிரிவர் அகத்தியரிடம் கூறியதாவது. “தேவியின் ஆயிரம் நாமங்களை உங்களிடம் கூறுகின்றேன். இது ரகசியத்தின் ரகசியமானது. இந்த மந்திரம் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டதாகவும், செல்வத்தை அளிக்கும் சக்தி கொண்டதாகவும், அகால மரணத்தை தடுக்கும் சக்தி கொண்டதாகவும், நீண்ட ஆயுளைத் தரும் சக்தி கொண்டதாகவும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தரும் சக்தி உடையதாகவும் இருக்கும்.

புண்ணிய நதிகளில் பலமுறை நீராடிய புண்ணியத்தை விட, காசியில் கோடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்த பலனை விட, கங்கையில் அஸ்வமேத யாகம் செய்த பலனை விட, பஞ்சக் காலங்களில் தண்ணீர் இல்லாத இடத்தில் கிணறு வெட்டிய புண்ணியத்தை விட, தொடர்ந்து அன்னதானம் செய்த புண்ணியத்தை விட, இவை எல்லாவற்றையும் விட மிகுந்த புண்ணியத்தைத் தருவது லலிதா சஹஸ்ரநாம பாராயணம்.

இந்த லலிதா சஹஸ்ர நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு பாவங்கள் நீங்கும். பாவத்தை நீக்க இதை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த குறைகளை நிறைகளாக்க இந்த லலிதா சஹஸ்ரநாமத்தில் பாராயணம் செய்யலாம்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அல்லது பௌர்ணமி தினத்திலும் இந்த பூஜையை செய்வது நமக்கு நல்ல பலனை அளிக்கும். இதை உச்சரிக்க முடியாதவர்கள் இந்த மந்திரத்தை நம் வீட்டில் ஒலிக்க செய்வதன் மூலம் பலனை அடையலாம்.

இதையும் படிக்கலாமே:
மஹாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த நான்கு இடங்கள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.