தீராத பிரச்சனைகள் தீர தீபம்

hanuman dheepam
- Advertisement -

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் பிரச்சனை என்ற ஒன்று நிச்சயமாக இருக்கும். அதுவும் இப்போதைய காலக்கட்டத்தில் சொல்லவே தேவையில்லை. இது சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினம் தினம் சந்திக்கக் கூடியது தான். ஆனால் ஒரு சிலர் வாழ்க்கையை நாம் பார்த்தோம் என்றால் பிரச்சனை மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். திரும்பிய திசை எல்லாம் அவர்களுக்கு துன்பங்களை நிறைந்திருக்கும்.

எந்த வேலை துவங்கினாலும் சரியாக அமையாது வருமானம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது இது மட்டும் இன்றி ஆரோக்கிய கேடு வீட்டில் மங்கள காரியங்கள் தடைபடுவது என அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஒரு மனிதன் இவ்வளவு துன்பத்தில் இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

- Advertisement -

இப்படியான துன்பத்திலிருந்து நம்மை காக்கக் கூடிய தெய்வமாக விளங்குபவர் தான் ஆஞ்சநேயர் அவரை எப்படி வணங்கினால் இந்த துன்பங்கள் அனைத்திலிருந்தும் நம்மால் மீள முடியும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

துன்பம் தீர வழிபாடு

பக்தர்கள் வேண்டுதலை உடனே நிறைவேற்றக்கூடிய சக்தி வாய்ந்த தெய்வங்கள் ஒருவர் தான் ஆஞ்சநேயர். அதிலும் எதிர்மறை ஆற்றல், எதிரிகள் தொல்லை, நம்முடைய தோஷங்கள் போன்றவற்றை நீக்கக் கூடிய தன்மையும் இவருக்கு அதிகம் உண்டு. இப்படியான ஆஞ்சநேயரை நம்முடைய துன்பம் தீர எப்படி வணங்குவது என்று பார்க்கலாம்.

- Advertisement -

ஆஞ்சநேயர் வழிபாடு என்றாலே அது சனிக்கிழமை தான். அதேபோல் மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு மிகவும் உகந்தது ஏனெனில் இவர் பிறந்த நட்சத்திரமாக அது கருதப்படுகிறது. இந்த இரண்டு தினங்களில் இந்த தீப பரிகார முறையை நாம் துவங்கலாம் அதே போல் இந்த தீபத்தை நாம் ஆலயத்தில் சென்று தான் ஏற்ற வேண்டும் வீட்டில் ஏற்றக் கூடாது.

சனிக்கிழமை வேலையில் காலை நேரத்தில் குளித்து முடித்து விட்டு வீட்டில் பூஜை செய்து விட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் போது ஒரு அகல் விளக்கு, நெய் கிராம்பு, பஞ்ச திரி போன்றவற்றை கொண்டு செல்லுங்கள் முடிந்தால் எளிமையான நெய்வேதியம் ஏதேனும் செய்து கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

இப்போது ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு முன்பாக அகல் விளக்கில் நெய் கிராம்பு சேர்த்து பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் எரியும் வேலையில் ஹனுமன் சாலிசா படிப்பது நல்லது தெரியாதவர்கள் ஸ்ரீராமஜெயம் அல்லது ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள் சொல்லலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு என்னென்ன துன்பங்கள் விலக வேண்டுமோ அத்தனையும் ஆஞ்சநேயரிடம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நெய்வேத்தியம் கொண்டு சென்று இருந்தால் அதை ஆலயத்திற்கு வருபவருக்கு தானமாக கொடுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை. இது போல 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் துவங்கும் நாள் தான் சனிக்கிழமை அல்லது மூல நட்சத்திரம் அதன் பிறகு நாட்கள் கணக்கில்லை. இடையில் தடை ஏற்பட்டாலும் அந்த நாட்களை தவிர்த்து விட்டு தொடர்ந்து தீபத்தை ஏற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமை பெற மஞ்சள் பரிகாரம்

இந்த தீபம் ஏற்ற துவங்கிய சிறிது நாட்களுக்குள்ளாகவே உங்கள் பிரச்சனைகள் மறைய துவங்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் ராம பக்தரான ஆஞ்சநேயரை வழிபட்டு நம்முடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -