துணியில் சாயம் ஒட்டி விட்டால், இனி வீட்டில் திட்டு வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. துணியில் ஒட்டிய சாயத்தை 1 நிமிடத்தில் சுலபமாக போக்குவது எப்படி?

dress
- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் தெரியாமல் வெள்ளை சட்டையை சாயம் போகும் துணியோடு சேர்த்து துவைத்து விடுவார்கள். கலர் சாயம், தெரியாமல் அந்த வெள்ளை சட்டையில் ஒட்டிக்கொள்ளும். வீட்டில் இருப்பவர்கள் இதை ஒரு சண்டை ஆகவே மாற்றி விடுவார்கள். வெள்ளை சட்டையில் சாயம் ஒட்டி விட்டது என்று இனி இந்த சண்டை உங்கள் வீட்டில் வராது. சாயம்பட்ட வெள்ளை சட்டையாக இருந்தாலும், மற்ற கலர் துணிகளாக இருந்தாலும், பின் சொல்லக்கூடிய குறிப்பை பயன்படுத்தி அந்தத் துணியை துவைத்துப் பாருங்கள். ஒரே நிமிடத்தில் கை நோகாமல் சாயத்தை நீக்கிவிடலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு சட்டை என்றால் அந்த ஒரு சட்டை மூழ்கும் அளவிற்கு 1 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 1/4 ஸ்பூன் அளவு பிளீச்சிங் பவுடரை போட்டு முதலில் நன்றாக கரைத்து விடவேண்டும். பிளீச்சிங் பவுடர் தண்ணீரில் கரையாமல் இருக்க கூடாது. கட்டியாக இருந்தால் அதை கையை வைத்து கரைத்து விடுங்கள். (பாத்ரூம் கழுவும் அதையே பிளீச்சிங் பவுடர் தான்.)

- Advertisement -

இந்த பிளீச்சிங் பவுடர் தண்ணீருடன்  1/2 எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து விட்டு, அதையும் நன்றாக தண்ணீரோடு கலந்து விடுங்கள். இப்போது சாயம் படிந்த சட்டையை இந்த தண்ணீரில் நனைத்து அப்படியே நன்றாக பிரட்டி பிரட்டி விடுங்கள். முப்பது செகண்ட் சட்டை இந்த பிளீச்சிங் தண்ணீரில் இருந்தால் போதும். சட்டையை வெளியே எடுத்து விட்டு சாயம் பட்ட இடத்தை லேசாக அந்த தண்ணீரில் நனைத்து நனைத்து கையால் கசக்கினால் சாயம் சுலபமாக நீக்கிவிடும்.

உடனடியாக இந்த சட்டையை நன்றாக நல்ல தண்ணீரில் 3 முறை அலசி விட்டு கம்ஃபோர்ட் போட்டு வெயிலில் காய வைத்து விடுங்கள். கம்ஃபோர்ட் ஏன் போட வேண்டுமென்றால், இந்த சட்டையில் பிளீச்சிங் பவுடர் வாடை தெரியாமல் இருப்பதற்காக தான். உங்களுடைய கைகள் ரொம்பவும் சென்சிடிவ் கைகள் என்றால் இந்த குறிப்பை பின்பற்றுவதற்கு முன்பு கையில் கிளவுஸ் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் வரும். பிளீச்சிங் பவுடரில் சட்டையைப் போட்டால் சட்டை சீக்கிரம் கிழிந்து போய்விடும் அல்லவா என்று. கவலை வேண்டாம். ப்ளீச்சிங் பவுடரை நாம் மிகக் குறைந்த அளவில்தான் சேர்த்து இருக்கின்றோம். அதோடு மட்டுமல்லாமல் அதை தண்ணீரில் போட்டு கரைத்து விடுவதன் மூலம் அதனுடைய பவர் கொஞ்சம் கம்மி ஆகிவிடும். எக்காரணத்தைக் கொண்டும் நேரடியாக ப்ளீச்சிங் பவுடரை சட்டை மேல் போட்டு தேய்க்க கூடாது. அப்போது அந்தச் அட்டையில் ஓட்டை விழுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளை சட்டைக்கு மட்டும் இந்த குறிப்பு கிடையாது. கலர் துணியாக இருந்தாலும் அந்த துணிக்கு இதேபோல மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய துணியில் இருக்கும் ஒரிஜினல் கலர் போகாது. ஒட்டிய சாயம் மட்டுமே போகும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப பயமா இருந்தா முதலில் பழைய சட்டையில் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். பின்பு புதிய சட்டைக்கு இதை மெத்தடை ட்ரை பண்ணலாம்.

- Advertisement -