உங்களை அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று ஊரே சொல்லுகின்றதா? 3 நாட்கள் இந்த தண்ணீரில் குளித்தால், உங்களைவிட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இல்லை என்று ஊரே சொல்லும்.

sivan
- Advertisement -

மனிதர்களுடைய வாழ்க்கையில் இந்த அதிர்ஷ்டம் என்பது ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது. அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், ராசி உள்ளவர்கள் ராசி இல்லாதவர்கள் என்று பிரித்து வைத்து மரியாதை கொடுக்கும் இந்த உலகத்தில், ராசியே இல்லாதவர்கள், வாழ்வது என்பது மிக மிக கஷ்டமான ஒரு விஷயம். சில பேர் சகுனம் பார்ப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘இவர்களது கை பட்டால் எதுவுமே விளங்காது. இவர்களுடைய முகத்தில் விழித்தால் அன்றைய பொழுது வீணாகிவிடும். இவர்கள் கையில் முதன்முதலாக எந்த பொருளை வாங்கினாலும் அந்த வியாபாரம் நஷ்டமாகும். ராசி இல்லாதவர்கள், அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லி சொல்லியே சிலரை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

sad

இப்படி ராசி இல்லாதவர்களை, தரித்திரம் படித்தவர்கள் என்றும் சொல்லப் படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் 3 குறிப்புகளில் உங்களால் எதை செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்து பலனடையலாம். எந்த பரிகாரத்தை செய்தாலும் மூன்று முறை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -

முதல் குறிப்பு. ஒவ்வொருவருக்கும் பிறந்த நட்சத்திரம் என்று ஒன்று இருக்கும். மாதத்தில் ஒரு நாள் அந்த நட்சத்திரம் வரும். நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் அன்றைய தினம் சமுத்திரத்திற்கு சென்று தலை ஸ்நானம் செய்ய வேண்டும். 3 மாதங்கள் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய, அந்த நாளில் மூன்று முறை சமுத்திர ஸ்நானத்தை செய்தால் உங்கள், உடலில் இருக்கும் தரித்திரம் நீங்கி உங்களை துரத்திக்கொண்டு வரும் துரதிர்ஷ்டம் நீங்கி, நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுவீர்கள்.

bathing

இரண்டாவது குறிப்பு. பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் இந்த பரிகாரத்தை அமாவாசை தினத்தில் செய்ய வேண்டும். ஒரு சிறிய பித்தளை பாத்திரம் அல்லது செம்பு பாத்திரத்தில் தான் இந்த தீர்த்தத்தை தயார் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சமாக கோமியம், ஒரு வெற்றிலை, சந்தன குச்சி, (சந்தன சக்கை என்று கேட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) அடுத்தபடியாக கஸ்தூரி மஞ்சள் கிழங்கு, வாசனை மிகுந்த ஒரு பொருள் ஜவ்வாது அக்தர் இப்படி எதை வேண்டுமென்றாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எல்லாப் பொருட்களையும் அமாவாசை தினத்தன்று காலை வேளையிலேயே ஒரு சொம்பில் போட்டு அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி நன்றாக ஊற வைத்து விட வேண்டும். அமாவாசை தினத்தன்று இரவு 7 மணிக்கு மேல் இந்த சொம்பு தண்ணீரை அப்படியே நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து தலை ஸ்னானம் செய்துவிட வேண்டும். தலைக்கு குளிக்கும் போது கிழக்கு பார்த்தவாறு நீங்கள், நின்று கொண்டு தான் குளிக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. இதை தொடர்ந்து மூன்று அமாவாசை செய்தால் உங்கள் உடலில் இருக்கும் துரதிஷ்டம் உங்களை விட்டு விலகி விடும்.

amavasai

மூன்றாவது குறிப்பு, இதை சிவன் கோவில்களில் செய்யவேண்டும். பொதுவாகவே எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த அபிஷேக தண்ணீர் வெளிவரக்கூடிய இடம் ஒன்று இருக்கும். இதை கோமுக தீர்த்தம் என்று சொல்லுவார்கள். குறிப்பாக சிவன் கோவில்களில் இருக்கும் அந்த அபிஷேக தண்ணீர் வெளிவரக்கூடிய இடத்தை சுத்தமாக தேய்த்து கழுவி, அந்த இடத்தில் மஞ்சளை தடவி உலர வைத்து விடுங்கள்.

அதன் பின்பு அந்த மஞ்சளை, தண்ணீர் ஊற்றி கழுவி ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை உங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தாலும் உங்களை பிடித்த துரதிர்ஷ்டம் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

komugam2

இதையும் கட்டாயம் 3 முறை செய்யவேண்டும். கோவிலில் இப்படி கோமுக தீர்த்த பரிகாரத்தைச் செய்ய கோவில் அர்ச்சகரிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மூன்று வழி முறைகளில், ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும். அதன் மூலம் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுவீர்கள். நம்பிக்கையோடு செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -