துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் பிடித்துக் கொண்டு ஆட்டிப் படைக்கின்றதா? துரதிர்ஷ்டத்தை விரட்டி அடிக்க 4 எலுமிச்சம்பழத்தை வீட்டில் இப்படி மறைத்து வைத்தாலே போதும்.

மனிதர்களுக்கு தீராத கஷ்டத்தை கொடுப்பதில் இந்த துரதிர்ஷ்டத்திற்க்கு முதலிடம் உண்டு. சில பேரை துரதிருஷ்டம் விடாமல் துரத்தி அடித்து கொண்டே இருக்கும். துரதிருஷ்டத்தை விரட்டியடிக்க சுலபமான முறையில் நம் வீட்டிலேயே என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரமும், உங்களை பிடித்த துரதிர்ஷ்டம் முழுமையாக உங்களை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வசதி படைத்தவர்கள் கணபதிஹோமம் செய்து தங்களுடைய வீட்டை துரதிஷ்டதிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். அதற்கு சமமான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எல்லோராலும் கணபதி ஹோமம் செய்து வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க முடியாது அல்லவா? அதிகப்படியாக பணத்தை செலவழிக்க முடியாதவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரம் இது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு நான்கு எலுமிச்சம் பழங்களும் கொஞ்சம் கல் உப்பும் தேவைப்படும். நான்கு சிறிய கிண்ணங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கிண்ணத்திற்கு உள்ளேயும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தை போட்டு, அந்த எலுமிச்சம் பழம் வெளியே தெரியாத அளவிற்கு கல் உப்பைக் கொட்டி நிரப்பிக்கொள்ளுங்கள். 4 கிண்ணங்களையும் இப்படி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு கிண்ணங்களையும் உங்களுடைய வீட்டின் நான்கு மூலைகளிலும் வைத்து விடுங்கள்.

salt

எலுமிச்சம்பழத்தை கிண்ணத்தில் வைக்கும்போது மனதால் குலதெய்வத்தை வேண்டி உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும் என்றும், உங்களை பிடித்த துரதிர்ஷ்டம் உங்களை விட்டு விலக வேண்டும் என்று, உங்கள் துயரங்கள் கஷ்டங்கள் அத்தனையும் விலக, மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த கிண்ணத்தை உங்களால் எப்போது முடியுமோ அந்த சமயம், அந்தக் கிழமையில் தயார் செய்து வீட்டின் நான்கு மூலை முடுக்குகளில் வைத்து விடுங்கள்.

ஏழு நாட்கள் இந்த கிண்ணத்தை தொட வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும். ஏழாவது நாள் இரவு எல்லோரும் உறங்கச் சென்ற பின்பு, அந்த கிண்ணத்தில் இருக்கும் உப்பு எலுமிச்சம் பழத்தையும் தொடாமல், அந்த கிண்ணத்தை மட்டும் தொட்டு கைகளால் எடுத்து, உள்ளே இருக்கும் பொருட்களை ஒரு கவரில் கொட்டி முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

lemon

இந்த முடிச்சை அப்படியே உங்கள் வீட்டு வெளிப்பக்கத்தில் வைத்துவிடுங்கள். காலை எழுந்து உள்ளே இருக்கும் பொருட்களை தொடாமல், அந்தக் கவரை கொண்டு போய் உங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரமாக இருக்கக்கூடிய இடத்தில் கால் படாத இடத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டுவிட வேண்டும். அவ்வளவு தான். வீடு திரும்பியதும் தலைக்கு குளித்து விடுங்கள். உங்களை பிடித்த துரதிர்ஷ்டம் முழுமையாக நீங்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலனைப் பெறமுடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.