இந்த 2 பொருட்களை சேர்த்து வீட்டின் நிலை வாசலில் கட்டினால் போதுமே! எல்லா தரித்திரமும் நீங்கி நல்லதே நடக்கும்.

murugan-milagu

இந்த பிரபஞ்சத்தில் எந்த அளவிற்கு நல்ல சக்திகளின் ஆதிக்கம் இருக்கிறதோ! அதே அளவிற்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கமும் நிறைந்து காணப்படுகிறது. திடீரென இனம் புரியாத மனமாற்றம் நம்மை மகிழ்ச்சியில் இருந்து வேறு ஒரு சோகமான நிலைக்கு உட்படுத்தும். இதையே எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சில தரித்திர நிலைகளை நம்முடைய வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு நம் கையில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

fight2

வீட்டில் இதுவரை இருந்து வந்த அமைதியான சூழ்நிலை திடீரென மாறி சண்டை, சச்சரவுகள் உடன் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பார்கள். கணவன்-மனைவிக்குள் வாய் தகராறு ஏற்படும் பின்னர் அது கைகலப்பாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இது போல தேவையில்லாத பிரச்சனைகள் தீர்வதற்கு எளிய பரிகாரம் ஒன்றை செய்து கொண்டால் போதும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல ஒரு ஆற்றல்கள் அதிகரிக்கத் துவங்கும்.

இதனால் உங்கள் தொழிலில் இருக்கும் மந்த நிலை மாறும்! நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க குலதெய்வத்தின் அருள் எப்போதும் இருக்க வேண்டும். குலதெய்வம் பெயர் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்வது உத்தமம்.

venkadugu

அவரவர்களின் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு கருப்பு துணியில் 27 என்கிற எண்ணிக்கையில் மிளகு மற்றும் சிறிதளவு வெண்கடுகு சேர்த்து ஒரு சிறிய முடிப்பாக முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முடிப்பை உங்களுடைய வீட்டின் நிலை வாசலில் அதாவது பிரதான வாசலின் மேலே நடுப்பகுதியில் கட்டி தொங்க விடுங்கள். உங்களுடைய குலதெய்வ மந்திரம் தெரிந்தவர்கள்! குலதெய்வத்தின் உடைய மந்திரத்தை 3 முறை உச்சரித்து பின் மேலே நிலை வாசலில் கட்டி தொங்க விடலாம். குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் ஓம் சரவணபவ என்கிற முருகனுடைய மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது பின் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

பொதுவாகவே வீட்டின் நுழை வாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இதனால் வாசல் கதவில் தங்கியிருக்கும் தெய்வங்கள் வீட்டிற்குள் எப்பொழுதும் நாம் கூப்பிட்ட குரலுக்கு வருவார்கள். அதனால் தான் வீட்டின் நிலை வாசலை எப்பொழுதும் சத்தம் போடும் படியாக வைத்திருக்கக் கூடாது என்பார்கள். கதவை அடிக்கடி ஆட்டுவதும் அதன் மேல் ஏறி நின்று விளையாடுவதும் கூடாது.

lock-and-key

தாழ்பாளை எப்பொழுதும் சத்தம் போடும் படியாக வைத்து இருந்தால் அதனை உடனடியாகச் சரிசெய்து விட வேண்டும். இல்லை என்றால் குல தெய்வ குற்றம் ஏற்பட்டு விடும். சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு விட்டால் தாழ்பாளை பழையது போல் சத்தம் போடாமல் வேலை செய்யும். எப்பொழுதும் நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் இட்டு அகல்விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டும். நிலை வாசலுக்கு மேலே இந்த வெண்கடுகு மற்றும் மிளகு கட்டி தொங்க விடும் பொழுது எந்த ஒரு துஷ்ட சக்தியும் நிலைவாசலை தாண்டி உள்ளே வர முடியாது. அத்தகைய பேராற்றல் கொண்ட இந்த 2 பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் வைத்துக் கொள்வது நலம் தரும்.