குடல் நோய்யை தீர்க்கும் அருமருந்தான துத்தி கீரையில் அருமையான சட்னி ரெசிபி

chatni keeraigal
- Advertisement -

காலையிலும், மாலையிலும் நாம் செய்யக்கூடிய டிபன் வகைகளுக்கு ஏதாவது ஒரு சட்னியை தயார் செய்து கொடுப்போம். அவ்வாறு நாம் செய்யும் சட்னி நம் உடல் நலனை பேணி காக்கும் என்றால் அந்த சட்னி செய்து தருவது நமக்கு கூடுதல் பலனை தரும் அல்லவா? அந்த வகையில் இன்று நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய அற்புதமான கீரையை வைத்து செய்யக்கூடிய சட்னியை தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

குடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவுவதாக கருதப்படுவது தான் துத்திக் கீரை. அனைத்து இடங்களிலும் பரவலாக கிடைக்கக்கூடிய இந்த துத்திக் கீரையின் பயனை அறியாமல் பலரும் அதை வீணாக்குகிறார்கள். துத்திக் கீரையை நாம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் அல்சர், மலச்சிக்கல், உடல் சூடு, மூலம் போன்ற நோய்களுக்கு மருந்தாக அது செயல்படுகிறது. அப்படிப்பட்ட இந்த துத்திக் கீரையை வைத்து எவ்வாறு சட்னி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

செய்முறை

முதலில் துத்தி செடியில் இருக்கும் இலைகளை பறித்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளை நீரில் சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் துத்தி இலைகளை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இலைகள் நன்றாக சுருள வதங்கியதும் அதை வேறொரு தட்டில் எடுத்து வைத்து விட வேண்டும்.

மறுபடியும் அந்த கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பை சேர்க்க வேண்டும். கடலைப்பருப்பு சிறிது நிறம் மாறும் பொழுது, அதில் 50 கிராம் சின்ன வெங்காயம் மற்றும் 15 பல் பூண்டை சேர்க்க வேண்டும். பூண்டும் வெங்காயமும் சிறிது வெந்ததும் அதில் 5 காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வெந்த பிறகு இரண்டு தக்காளியை நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். பிறகு அதில் சட்னிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து, கால் ஸ்பூன் சீரகத்தையும் சேர்க்க வேண்டும். தக்காளி நன்றாக கரையும் அளவிற்கு வதக்க வேண்டும். பிறகு அதில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் கீரையை சேர்த்து நன்றாக இரண்டு முறை கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய இந்த பொருட்களை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

அடுத்து இவைகளை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுவையான அதே சமயம் சத்து மிகுந்த துத்தி கீரை சட்டி தயாராகி விட்டது. இதை நாம் இட்லி, தோசை, அடை போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: டீ போடும் சமயத்தில் மாவு அரைக்காமல் 5 நிமிடத்தில் வடை செய்வது எப்படி?

வெறும் துத்தி இலைகளை சாப்பிடுவதற்கு பதிலாக நாம் இதை சட்னியாக செய்து கொடுக்கும் பொழுது அவற்றின் ருசியில் தன்னை மறந்து சாப்பிட்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.

- Advertisement -