ஜலதோஷமும் தும்பலும் மாறி மாறி வந்து தொல்லை கொடுக்குதா? சட்டுன்னு இந்த தூதுவளை சூப்பை குடிங்க. சளி இருமல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

soup
- Advertisement -

காலநிலை மாற்றம் காரணமாக இந்த சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கடைப்பு, சளி, இருமல், ஜலதோஷ பிரச்சனையால் அதிகமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு மருத்துவரை அணுகி மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாலும், கூடவே வாரத்தில் ஒரு நாள் இந்த சூப்பை வைத்து குடித்து பாருங்கள். ஜலதோஷ பிரச்சனைக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும். அந்த காலத்தில் நம் பாட்டி சொல்லிக் கொடுத்த தூதுவளை சூப் ரெசிபி, மற்றும் தூதுவளை தோசை ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். மிக மிக சுவையாக எளிமையாக இரண்டு வகையான தூதுவளை ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் சிறிதளவு தூதுவளைக் கீரை நமக்குத் தேவை. அதாவது 15 இல் இருந்து 20 இலைகள் அளவு தூதுவளை கீரை கிடைத்தால் கூட போதும். இரண்டு பேர் குடிக்கும் அளவுக்கு தாராளமாக சூப் வைக்கலாம். இந்த கீரையில் முள் இருக்கும். கீரைக்கு மேலே இருக்கும் முல்லை பக்குவமாக நீக்கி விடுங்கள். கீரையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், வரமிளகாய் 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது 10, தோல் உரித்த பூண்டு பல் 5, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்த உடன் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் 1, போட்டு வதக்குங்கள்.

இறுதியாக சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரை, மஞ்சள் தூள் 2 சிட்டிகை போட்டு, இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆரவைத்து அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த விழுதை அப்படியே மீண்டும் ஒரு கடாயில் போட்டு, 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இரண்டு நிமிடம் போல கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து சுட சுட பவுலில் ஊற்றி குடித்தால் சூப்பரான தூதுவளை சூப் தயார். இதை தூதுவளை ரசம் என்றும் சிலர் சொல்லுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரம் ஒரு முறை இந்த சூப்பை குடித்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுவும் குளிர் கால, மழை கால நேரத்தில் இந்த சூப் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும்.

தூதுவளைக் கீரை தோசை செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் 3 பல், பச்சை மிளகாய் 2, சுத்தம் செய்த தூதுவளை கீரை 15 ல் இருந்து 20 இலைகளை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். நம் வீட்டில் இருக்கும் தோசை மாவை தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, இந்த விழுதை தோசை மாவில் ஊற்றி நன்றாக கரைத்து வழக்கம் போல தோசை வார்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் தோசையை விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -

இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் வழக்கம் போல பரிமாறலாம். சூப் குடிக்காதவர்களுக்கு இப்படி தோசை சுட்டு கொடுங்க. வாரத்தில் ஒரு நாள் இந்த தோசை சாப்பிட்டாலும் சளி தொந்தரவு இருக்காது.

இதையும் படிக்கலாமே: ஒரு உருளைக்கிழங்கு இருந்தா போதும். மீந்த சாதத்தை வைத்து ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடலாம். காசு கொடுத்து வாங்குனா கூட இவ்வளவு ஹெல்தியான ஸ்நாக்ஸ் உங்களுக்கு கிடைக்காது.

சின்ன தூதுவளை கீரையை கொண்டு வந்து உங்கள் வீட்டு தொட்டியில் பதியம் போட்டு விட்டாலே செடி வளர தொடங்கி விடும். சுலபமாக சமையலுக்கு அந்த கீரையை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த இரண்டு ஆரோக்கியமான ரெசிபியும் பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -