ஒரு உருளைக்கிழங்கு இருந்தா போதும். மீந்த சாதத்தை வைத்து ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடலாம். காசு கொடுத்து வாங்குனா கூட இவ்வளவு ஹெல்தியான ஸ்நாக்ஸ் உங்களுக்கு கிடைக்காது.

leftover bonda
- Advertisement -

காலையில் சமைத்தால் எப்படியும் ஒரு கப் சாதமாவது கண்டிப்பாக மீந்து விடும். சாதத்தை வைத்து பல வகை ஸ்நாக்ஸ் ரெசிபிகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். மீந்த சாதத்தை வைத்து இந்த ஒரு வித்தியாசமான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்துப் பாருங்க. ஸ்கூல் முடிந்து வரும் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான ஸ்னாக்ஸா கூட இது இருக்கும். வாங்க இப்ப இந்த ஸ்நாக்ஸ் எப்படி ரெடி பண்றதுன்னு பார்க்கலாம்.

செய்முறை

இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் மீந்த சாதத்தை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல், மை போல அரைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதே போல் ஒரே ஒரு உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து துருவி அதையும் இந்த சாதத்துடன் கலந்து விடுங்கள். இத்துடன் நாலு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, கொஞ்சம் கொத்தமல்லி இவை மூன்றையும் நல்ல பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்கள் வீட்டில் என்ன காய்கறி இருக்கிறதோ கேரட் , பீன்ஸ், கோஸ், என எந்த காய்கறி இருந்தாலும் அதிலும் கொஞ்சம் எடுத்து நல்ல பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது நறுக்கிய காய்கறி, வெங்காயம், தக்காளி அனைத்தையும் ஏற்கனவே கலந்து வைத்த மாவில் சேர்த்து நன்றாக வடை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் போதவில்லை என்றால் லேசாக தெளித்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை தண்ணீர் அதிகமானது போல் இருந்தால் கடலை மாவை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கலந்து வைத்த மாவில் இருந்து சின்ன, சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் சூப்பரான ஹெல்தியான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் மீந்த சாதத்தை வைத்து தயார் செய்து விட்டோம்.

இதையும் படிக்கலாமே: கமகமன்னு மிளகு வாசம் வீச ‘மிளகு மோர் குழம்பு’ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் மெய் மறந்து சாப்பிடுவீங்க!

இந்த ஸ்நாக்ஸை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது காய்கறிகளையும் கொடுத்தது போல இருக்கும். அதே நேரத்தில் நமக்கும் சாதம் மீந்து வீணாகி விடாமல் இருக்கும். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் நன்றாகவே இருக்கும். நீங்களும் உங்க வீட்ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -