இந்திய பந்துவீச்சாளரை பிரித்து எடுத்த நியூசி துவக்க வீரர் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அதிரடி. டார்கெட் 210-யை தாண்டும்

Tim seifert

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.

rohith

அந்த அணியின் துவக்க வீரர்களாக முன்ரோ மற்றும் புதுமுக வீரர் செபர்ட் ஆகியோர் களமிறங்கினர். இரு வீரர்களும் இந்திய அணி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் பறக்க விட்டனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 8.2 ஓவர்களுக்கு 86 ரன்களை அடித்தது.

முன்ரோ 34 ரன்களில் வெளியேற மற்றொரு துவக்க வீரரான செபர்ட் 6 சிக்ஸர் 7 பவுண்டரி என இந்திய அணியை கலங்கவிட்டார். முடிவில் அவர் 43 பந்தில் 84 ரன்களை அடித்து கலீல் பந்தில் போலடாகி வெளியேறினார்.

Ross

தற்போது நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை குவித்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு 210 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிக்கலாமே :

ஜோத்பூர் நீதிமன்றத்தில் பாண்டியா மற்றும் ராகுல் மீது வழக்கு. மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.திருந்துங்கள் – அனில் கும்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்