ஜோத்பூர் நீதிமன்றத்தில் பாண்டியா மற்றும் ராகுல் மீது வழக்கு. மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.திருந்துங்கள் – அனில் கும்ளே

Kumble

இந்திய வீரர்களான பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதால் அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டனர்.

KL and HP

பிறகு சில நிபந்தனைகளோடு மீண்டும் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மீதும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் கும்ளே கூறியதாவது : கிரிக்கெட் வீரர்களுக்கு சொந்த வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. அதனை நான் மதிக்கிறேன் ஆனால், பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் பேசும் போது என்ன பேசுகிறோம் என்று புரிந்து பேசவேண்டும். ஏனெனில் இந்தியாவுக்காக நீங்கள் விளையாடுகிறீர்கள் உங்களை பலர் பின்தொடர்வார்கள். எனவே, நீங்கள் சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள்.

pandya

எனவே, உங்களது விளையாட்டில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கூறும் சில கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். தவறு என்றால் இப்போது அவர்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் அதுவே இப்போது உங்களுக்கு நிகழ்ந்துள்ளது. எனவே, இதற்கு பிறகு சரியான முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தினை கடைபிடித்தால் மக்கள் உங்களை கொண்டாடுவார்கள். இல்லையென்றால் மதிக்க கூட மாட்டார்கள் என்று கும்ளே கூறினார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்த பவுலரே இந்திய அணியின் சொத்து – சச்சின்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்