இந்த விஷயத்துக்கு வெளிநாட்டில், எதற்காக பேப்பர் யூஸ் பண்றாங்க? என்னைக்காவது நீங்க இதை யோசிச்சு இருக்கீங்களா?

toitet
- Advertisement -

சில நேரங்களில் சில விடயங்கள் எதற்காக இருக்கிறது. அதனால் மனிதர்களுக்கு என்ன விதமான நன்மைகள் ஏற்படும்? இப்படியான யோசனைகள் நமக்குள் ஏற்படும். அந்த வகையில் நமக்கு தெரியாத சில வற்றை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சுவாரசியமான தகவல் 1:
ஏ.டி.எம் மையங்களில் எதற்காக 24 மணிநேரமும் ஏசி ஓடிக்கொண்டே இருக்குது. ஏ.டி.எம் மிஷின் என்பது 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும். யாராவது பணம் எடுத்தால், மெஷினின் மூலம் கணக்குகள் பரிமாற்றத்தில் இருந்து கொண்டே இருக்கும். இன்டர்நெட் இயங்கிக்கொண்டே இருக்கும். மிஷினில் டேட்டா டிரான்ஸ்வர் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் மிஷின் அதிக சூடாகும். அந்த சூட்டின் மூலம் மெஷினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது, அந்த சூட்டை தணிப்பதற்காக தான் ஏ.டி.எம் மையங்களில் ஏசி போடப்பட்டுள்ளது.

- Advertisement -

சுவாரசியமான தகவல் 2:
நம்முடைய இந்திய நாட்டில் கழிவறைக்கு சென்று வந்தால் கட்டாயம் தண்ணீர் தேவை. ஆனால், வெளிநாடுகளில் மட்டும் கழிவறைகளில் டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவதற்கு என்ன காரணம். மேற்கத்திய நாடுகளில் இந்த விஷயத்திற்கு எதற்காக டாய்லெட் பேப்பர்களை பயன்படுத்துகிறார்கள். என்று என்றைக்காவது நீங்கள் யோசிச்சி இருக்கீங்களா?

பொதுவாகவே மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும். குளிர் என்றால் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. சுடு தண்ணியை வெளியில் கொண்டு சென்றாலும் அது உடனடியாக ஐஸ் கட்டியாக மாறிவிடும். நம்ம ஊரில் மழை பெய்வது போல அவர்களுடைய ஊரில் பனி மழை பெய்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட இடங்களில் கழிவறைக்கு தண்ணீரைப் பயன்படுத்துவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இதற்காகத்தான் மேற்கத்திய நாடுகளில் இந்த விஷயத்துக்கு டாய்லெட் பேப்பரை பழக தொடங்கினார்கள். அதுவே காலப்போக்கில் அவர்களுடைய பழக்கமாகிவிட்டது.

- Advertisement -

சுவாரசியமான தகவல் 3:
இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்சும் அடங்குவார். பில்கேட்ஸ் அவர்களுடைய திருமண புகைப்படங்களை நம்மால் இணையதளத்தில் காணமுடியாது. அதாவது அதிக அளவிலான திருமணப் புகைப்படம் இணையதளத்தில் இல்லை.

gates

பில்கேட்ஸ் அவர்களுடைய திருமணம் ஹவாய் தீவில் இருக்கும் Lanai Island ல் தான் நடந்தது. இந்த தீவில் இவருடைய திருமணம் நடக்கும்போது, அந்த தீவில் இருக்கக்கூடிய அத்தனை ஹோட்டல்களையும், பில்கேட்ஸ் தன்னுடைய பெயரில் புக்கிங் செய்து வைத்துள்ளார். அந்த தீவிற்கு வந்து செல்லும் ஹெலிகாப்டர்களையும் இவரே புக் செய்து கொண்டாராம். எதற்காக தெரியுமா? அந்த தீவுக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்று தான்.

bill-gates

குறிப்பாக பத்திரிகையாளர்களின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக. அந்தத் தீவில் இருக்கும் அத்தனை விஷயத்தையும் தன் பெயரில் புக்கிங் செய்து வைத்துக் கொண்டால் எப்படி பிரஸ் மீடியாவால் இந்த தீவுக்குள் வரமுடியும். அப்படியே வந்தாலும் எந்த இடத்தில் அவர்கள் தங்குவார்கள். எல்லா ஹோட்டல் ரூம் சையும் பில்கேட்ஸ் தன் பெயரில் புக் பண்ணிட்டாரே.

bill-gates1

பில்கேட்ஸ் மாதிரி பெரிய ஆளுங்க மீடியா கிட்ட இருந்து தப்பிக்வும், பிரைவசியா தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் இப்படி தான் பண்ணனும் போல இருக்கு. உலகப் புகழ் பெற்ற மனிதர்களுக்கு இப்படி ஒரு கஷ்டமா.

- Advertisement -