பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட கணவனின் காலை மனைவி பிடிக்க வேண்டுமா?

compressing-the-feet1

பணம் நம் வீட்டில் அதிகமாக சேருவதற்கு நாம் எத்தனையோ பரிகாரங்களை எவ்வளவு காசு கொடுத்தெல்லாம் செய்திருப்போம். அதில் சில பரிகாரங்களில் பலன் இருந்திருக்கும். சில பரிகாரங்களில் பலன் இருந்திருக்காது. சிலர் எந்த பரிகாரத்தை கேட்டாலும் அது நமக்கு பயன் தருமா என்று சிந்தித்து செயல்படுவார்கள். சிலர் தன் காதால் கேட்ட பரிகாரத்தை எல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். சிலருக்கு பணம் வரும் என்று கூறிவிட்டால் போதும் கண்களை மூடிக்கொண்டு அந்த பரிகாரத்தை செய்து விடுவார்கள். இப்படி பலவகைப்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழ்வது தான் இந்த பூமி. ஆனால் இந்த பதிவினை படித்து முடித்த பின்பு உங்களது மனது எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.. பல வருடங்களுக்கு முன்பெல்லாம் கணவனின் காலை மனைவி பிடித்து விட்ட காலம் மாறி, மனைவியின் காலை கணவன் பிடிக்கும் காலம் தற்சமயம் வந்துவிட்டது என்று சொன்னால், நீங்கள் இல்லை என்று கூறுவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இந்த பதிவினை நீங்கள் படித்த பின்பு இனி எல்லாம் தலைகீழாக மாறப்போகிறது. நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். ஆனால் சில பெண்கள் இன்றளவும் கூட கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருக்கிறார்கள். அவர்களை பற்றி எந்த தவறான கூற்றும் இல்லை.

compressing-the-feet

நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்ற எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயங்களாக இருந்தாலும், அது பொய் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று தான். இந்த பதிவை படிக்கும்  பெண்களாக இருந்தால் தயவு செய்து உங்கள் மனதிற்குள் திட்டாதீர்கள். ஆண்களாக இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவீர்கள். இந்த தலைப்பை பார்த்துவிட்டு கோபப்பட்ட பெண்களும் கூட, இந்த பதிவின் இறுதியில் மிகவும் சந்தோஷப்பட தான் போகிறார்கள். இந்தப் பதிவில் அப்படி என்னதான் ரகசியம் அடங்கியுள்ளது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வோமா?

மனைவி, கணவனின் காலை கட்டாயம் பிடித்து தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. ஏனென்றால் ஆண்களின் முழங்காலிலிருந்து கீழ் பாதம் வரை உள்ள பகுதியில்தான் சனி பகவான் வாசம் செய்கின்றார். பெண்களின் முழங்கையில் இருந்து கீழ் விரல்கள் வரை சுக்கிரன் வாசம் செய்கின்றார். சுக்கிரனின் அழுத்தம் சனி பகவானின் மீது விழும்போது அதிகப்படியான யோகம் வரும். பண வரவு வரும். இது ஆன்மீக ரீதியாக கூறப்பட்ட உண்மை. இப்போது நினைத்துப் பாருங்கள் கணவனின் காலை மனைவி பிடித்து விடுவது சரியானது தானே..

vishnu-lakshmi

ஆனால் பெண்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்களா? ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மாட்டார்கள். ‘பணம் வரும் என்று சொல்லிவிட்டால் உடனே கணவனின் காலை பிடித்து விடுவோமா? என்று பெண்கள் மனதிற்குள் கேட்கும் கேள்வியும் புரிகிறது! மனைவிமார்களே உங்களுக்கான ஆதாரம் இதோ.

- Advertisement -

நாம் அனைவரும் வணங்கும் திருமாலின் காலை மகாலட்சுமி பிடித்துக் கொண்டிருக்கிறார்களா? இதனால்தான் அந்த மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதியாக இருக்கின்றார்கள். வீட்டில் இருக்கும் மனைவிமார்களும் மகாலட்சுமியின் அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால் உங்கள் கணவரின் காலைப்பிடித்து தான் ஆகவேண்டும். இனி உங்கள் இஷ்டம்.

vishnu-lakshmi1

இந்தப் பதிவைப் படிக்கும் ஆண்களாக இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் உங்களது மனைவியை, உங்கள் வீட்டு மகாலட்சுமியின் ரூபத்தில் பாருங்கள். இந்த பதிவை படிக்கும் பெண்களாக இருந்தால் உங்களது கணவரை நீங்கள் அந்த பெருமாளின் அவதாரமாக பாருங்கள். உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் இருவருக்கும் இருக்கும் அன்னோன்யமே உங்கள் வீட்டில் நிம்மதியை கொடுத்து பணவரவை குறையாமல் தந்துகொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் எதிரிகளை தண்டிக்காமல், தள்ளிவைக்க ஒரு சுலபமான வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi vasam seiyya Tamil. Mahalakshmi kadatcham Tamil. Selvam sera enna seiya vendum. Selvam peruga tips Tamil.