ரொம்ப தின்னாக இருக்கும் உங்க முடியும் திக்காக மாற வாழைப்பழத்துடன் மயோனைஸ் சேர்த்து இப்படி பேக் போட்டு தான் பாருங்க, ஒரே வாஷில் ஆச்சரியப்படுவீங்க!

hair-banana-mayonaise
- Advertisement -

முட்டை மற்றும் முட்டை சேர்த்து செய்யப்படும் இந்த மயோனைஸ் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல், தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கும் பெருமளவு உதவி புரிந்து வருகிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் செயற்கை பொருட்கள் பல வந்துவிட்ட நிலையில் இப்படி இயற்கையான முறையில் நம்முடைய தின்னாக இருக்கும் முடியை திக்காக மாற்றுவது என்பது சவாலான காரியமாக இருக்கிறது. மெல்லிய முடியை அடர்த்தியாக, வலிமையாக்கி வளர செய்ய இயற்கையாக என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

திக்காக, நல்ல அடர்த்தியாக இருக்கும் தலை முடி ஆரோக்கியமானது. எனவே நீண்ட கூந்தலை விட, அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கு தான் அனைவரும் விரும்புவார்கள். எனவே உங்களுடைய மெல்லிய முடியை நல்ல வலிமையாக்கி, அடர்த்தியாக்கி திக்காக மாற்ற முதலில் ஏதாவது ஒரு வகையான வாழைப்பழத்தை இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக மஞ்சள் வாழைப்பழம் எடுத்தாலும் சரி.

- Advertisement -

வாழைப்பழத்தை நன்கு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த வாழைப்பழ பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு மயோனைஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். மயோனைஸ் என்பது முட்டை மற்றும் எண்ணெய் சேர்ந்த கலவை தான். பெரிதாக இதில் வேறு ஒன்றும் சேர்க்கப்பட மாட்டாது எனவே இதை சேர்ப்பதில் அச்சம் கொள்ள தேவையில்லை. இதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள்.

பின்னர் ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதை பீட்டர் கொண்டு நன்கு பீட் செய்து பேஸ்ட் போல கலந்து விட வேண்டும். இந்த பேஸ்ட்டை அப்படியே தலையின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவிக் கொள்ள வேண்டும். பிறகு தலை முடியை கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது ஏதாவது ஒரு மெல்லிய துணியால் தலைமுடியை இறுக்கமாக கட்டி விடுங்கள். பிறகு அப்படி அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து தலை முடியை சாதாரண தண்ணீரால் அலசுங்கள். தலைமுடியை சூடாக இருக்கும் தண்ணீரை கொண்டு ஒருபோதும் அலசக்கூடாது. எனவே சில்லென்ற தண்ணீரால் அலசுங்கள் அல்லது வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரால் தலை முடியை அலச பழகுங்கள். இதை ஒரு முறை செய்யும் பொழுதே உங்களுக்கு சூப்பரான ரிசல்ட் கிடைக்கும். உங்களுடைய முடி ஷைனிங்காக, சிடுக்குகள் இல்லாமல் காற்றை போல அலைபாய துவங்கும்.

பிறகு ஆரோக்கியமான முறையில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மட்டும் தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். இந்த ரெண்டு விஷயத்தை செய்தாலே உங்களுடைய தலைமுடி தின்னாக இருந்து திக்காக மாற துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக முடி வலிமை பெறுவதை நீங்களே பார்க்கலாம். அது மட்டும் அல்லாமல் முடி ரொம்பவும் ஷைனிங்காக, நாமே ஆச்சரியப்படும்படி அவ்வளவு சூப்பராக இருக்கும். இதில் குளிர்ச்சி தரக்கூடிய எந்த பொருளையும் நாம் சேர்க்கவில்லை எனவே இதை ஹார்பேக் போடுவதால் நமக்கு குளிர்ச்சி ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -