- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சமையல் பரபரப்பை குறைக்க உதவும் குறிப்புகள்

சமையல் பரபரப்பை குறைக்க உதவும் குறிப்புகள்

- Advertisement -

பள்ளிகள் ஆரம்பித்து விட்டது. வேலைக்கு செல்லும் தாய்மார்களும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று சமையல் வேலையை பரபரப்பாக செய்து கொண்டு இருப்பார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் தங்களை அறியாமல் ஏதாவது சிறு பிழைகள் செய்துவிட்டாலோ அல்லது அந்த சமையலை விரைவாக முடிப்பதற்காக செய்யக்கூடிய எளிமையான குறிப்புகளை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

காலையில் அவசரமாக சாதத்தை செய்யும் பொழுது எல்லாருக்கும் ஒன்று நடக்கும் என்னவென்று தெரியுமா? சாதம் குக்கரில் வைக்கும் பொழுது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக ஒரு விசில் விட்டு விட்டோம் என்றால் சாதம் அடிப்பிடித்து விடும். அந்த அடி பிடித்த சாதத்தை அப்படியே வைத்துவிட்டால் எல்லா சாதத்திலும் அந்த வாசம் வரும். அந்த வாசத்தை போக்குவதற்காக சாதத்தை உடனே எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி அந்த சாதத்தின் மேலே ஒரு பிரெட்டை எடுத்து வைத்துவிட்டு மூடிவிட வேண்டும். அப்படி செய்தால் அந்த அடிப்பிடித்த ஸ்மெல் எல்லாமே அந்த பிரட்டில் தங்கிவிடும் சாதம் வாசம் வராமல் இருக்கும்.

- Advertisement -

உருளைக்கிழங்கு காலையில் செய்யும் பொழுது உருளைக்கிழங்கின் தோல் ஆனது உருளைக்கிழங்குடன் சேர்ந்து வரும் அப்படி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உருளைக்கிழங்கையை வேக வைக்கும் பொழுது உருளைக்கிழங்கின் மேலே ஸ்லைஸ் ஆக கட் பண்ணி குக்கரில் போட்டால் உருளைக்கிழங்கு வெந்து வரும் பொழுது சுலபமாக உரிக்கலாம்.

சப்பாத்தி மாவு காலையில் உடனே பிசைவதற்கு சுலபமாக செய்ய ஒரே வழி என்ன என்று பார்ப்போமா? பெரிய மிக்ஸி ஜாரில் இரண்டு கப் மாவு ஒரு டீஸ்பூன் உப்பு ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அரைத்த உடனே ஒரு பாத்திரத்தில் கொட்டி பிறகு அந்த மாவை பிசைந்தால் எளிமையாக பிசைந்து விட முடியும்.

- Advertisement -

காலையில் புளியை ஊற போட மறந்து விட்டோம் உடனே புளிக்கரைசல் வேண்டுமென்றால் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது புளியை சேர்த்து அதில் தண்ணீரை சூடு பண்ணி வெதுவெதுப்பான தண்ணீராக மாற்றி அதில் ஊற்றி அரைத்து வடிகட்டினால் உடனே புளிக்கரைசல் தயாராகிவிடும்.

துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது எல்லாருக்கும் ஒன்று நடக்கும். என்னவென்று தெரியுமா? குக்கரில் பருப்பு பொங்கி வெளியே வந்து தண்ணீர் எல்லாம் வந்து கேஸ் அடுப்பு எல்லாமே பரவி விடும். பிறகு அதை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? குக்கரில் பருப்பை போடும் பொழுது ஒரு டம்ளர் பருப்புக்கு இரண்டரை அளவு தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீரை வைத்து விட்டு அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டால் குக்கரில் உள்ள தண்ணி ஆனது வெளியே வராது.

- Advertisement -

சமையலறையில் சர்க்கரையில் அடிக்கடி எறும்பு வரும் கோதுமை மாவில் எறும்பு வரும் வண்டு பிடிக்கும். அப்படி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? சர்க்கரை டப்பாவில் இரண்டு மூன்று கிராம்பை எடுத்து போட்டு விடவும். கோதுமையில் இரண்டு டீஸ்பூன் உப்பை போட்டு கலந்து வைக்கவும் அப்படி செய்தால் எறும்பு வண்டு வராது.

இதையும் படிக்கலாமே பீட்ரூட் வடை செய்யும் முறை

மிகவும் எளிமையான இந்த சமையல் குறிப்புகள் உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்கும் என்று நம்பி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்