அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள் விளக்கம்

Thiruvalluvar
- Advertisement -

அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள் பொருள் விளக்கம் | Agara muthala eluthellam thirukkural meaning in Tamil

இன்றைய தினத்தில் அகர முதல எழுத்தெல்லாம் என தொடங்கும் ஒரு அற்புதமான திருக்குறளையும் அதன் பொருளையும், மேலும் ஒரு பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

thiruvalluvar 3
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து – குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

- Advertisement -

thiruvalluvar 4

இன்றைய சிந்தனை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்
உனக்கு உதவியவரை என்றும் மறவாதே.

விளக்கம்
சமையலில் உப்பு அதிகமாக இருந்தால் கரிக்க துவங்கும். அதே போல உப்பு குறைவாக இருந்தால், என்னடா இது “உப்புசப்பு இல்லாத சாம்பாரா இருக்கு” என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உணவில் சேர்க்கப்படும் மற்ற பொருட்களில் இருந்து உப்பு சற்று வேறுபடுகிறது. உப்பு குறைவாக இருந்தால் அதை நாம் எப்போது வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். அதனாலேயே பழங்காலம் தொட்டு விருந்தில் உப்பை சிறிதளவு தனியாக இலையில் வைப்பது வழக்கம். ஒருவேளை உப்பு குறைவாக இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இதை குறிப்பாக கொண்டு தான், நமக்கு உணவு பரிமாறுவார்கள் குடும்பத்திடம் நாம் எப்போதும் அன்பு பாராட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர் பெரியவர்கள்.

English Overview:
Here we have Agara muthala eluthellam Thirukkural with meaning in Tamil and Indraya sinthanai in Tamil.

- Advertisement -