திருப்பதி சிலை வேற்று கிரகத்தில் இருந்து வந்ததா ? – வீடியோ

Perumal

உலகின் 3 ஆவது பெரிய மதமான இந்து மதத்திற்கு பூர்வீகம் பாரத தேசம் என்பதால் நாடு முழுவதும் இம்மதத்திற்கான கோவில்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. அப்படி நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள் மட்டும் இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்றக் கோவில்கள் ஒரு சில தான் இருக்கின்றன. தினமும் பலலட்ச மக்கள் வழிபடவும் உலகின் பணக்கார இந்துக் கோவில் எனப்பெயர் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நம் மக்களிடம் அறிமுகம் தேவையில்லை. இந்த கோவிலில் உள்ள பெருமாள் சிலை வேற்று கிரகத்தில் இருந்து வந்ததாக தீட்சிதர் ஒருவர் கூறுகிறார். அதை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

“கலியுகக் கடவுள்” என்று போற்றப்படும் திருப்பதி திருமலை ஸ்ரீ வேங்கடாசலபதியின் கோவிலை ஒரு முறையேனும் சென்று தரிசிக்காத பக்தர்களே நம் நாட்டில் இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் கோவில் என்று உலகளவில் புகழ் பெற்றுள்ளது.

இக்கோவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகள் உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு மலைத்தொடர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இத்திருமலைக் காட்டுப் பகுதில் மட்டுமே காணப்படும் “சைக்கஸ் பெடோமி” மரம், “தங்க நிறப் பல்லி”,”தங்க நிற லெமூர் குரங்கு” போன்ற தாவர, விலங்குகள் இருப்பது இத்திருப்பதி திருமலையின் தொன்மைக்கும், தனித் தன்மைக்கும் சான்று என முன்னாள் ஆய்வாளரும், தற்போதைய இக்கோவிலின் அர்ச்சகருமான ஒருவர் கூறுகிறார்.

மேலும் இக்கோவிலின் மூலவரான ஸ்ரீவேங்கடாசலபதியின் திருவுருவச்சிலை இப்பூமியைச் சேர்ந்தது இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறுகிறார். இக்கோவிலின் மூலவருக்கு சாற்றப்படும் பச்சைக்கற்பூரம் சற்று அமிலத் தன்மைக் கொண்டது எனவும் இத்தனையாண்டுக் காலம் மூலவர் சிலைக்கு இது சாற்றப்பட்டும் அச்சிலை பாதிக்கப்படாமல் இருப்பதும், இப்பூமியின் வேறு எந்தக் கல்லுக்கும் இப்படிப்பட்ட சக்தியில்லை என்பதாலும் அச்சிலை வேற்றுகிரகத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளதாக அந்த அர்ச்சகர் கூறுகிறார். தன் உண்மையான பக்தர்களின் வாழ்வில் திருப்பங்கள் தரும் “திருப்பதி ஏழுமலையானைப்” பற்றிய இத்தகவல் ஆச்சர்யமானது தான்.