திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே தினத்தில் ரூபாய் 14 கோடி வருமானம். விவரம் இதோ

perumal

மக்களுக்கு செய்யப்படுகின்ற சேவைகளே மகேசன் எனப்படும் இறைவனுக்கு செய்யப்படுகின்ற சேவை என ஒரு அனுபவப் பழமொழி கூறப்படுவதுண்டு. பூமியில் மனிதராகப் பிறந்தவர்கள் அனைவருமே மீண்டும் பிறவா பெருநிலை எனப்படும் முக்தியை பெற முயல வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. புராணங்களில் கொடிய அரக்கர்களுக்கும் அவர்கள் இறந்த பிறகு, தனது வைகுண்டத்தில் இடம் தந்தவர் மகாவிஷ்ணு எனப்படும் திருமால். அந்தத் திருமால் வெங்கடாசலபதி எனும் பெயரில் நின்று அருள் பாலிக்கும் ஒரு புண்ணிய தலம் தான் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில். அந்த கோயில் குறித்த ஒரு தகவலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

tirupati

திருப்பதி நகரில் ஏழு மலைகளின் மீது அமைந்திருக்கும் திருமலை வேங்கடாசலபதி கோயில் உலக புகழ்பெற்றது என்பதை அனைவரும் அறிவர். தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்ற ஒரு இந்துக் கோவில் என்கிற பெருமை திருப்பதி திருமலை கோவில் பெற்றிருக்கிறது. அந்த திருமலைக் கோயிலுக்கு உலகெங்கிலும் இருக்கின்ற பக்தர்கள் தினந்தோறும் வந்து, பல மணி நேரம் வரிசையில் பொறுமையாக காத்திருந்து, நாராயணர் எனப்படும் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

இந்து மதத்தினரின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருக்கும் இந்த திருப்பதி மற்றும் அதனை சார்ந்திருக்கும் கோயில்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை கடந்த 1932 ம் ஆண்டு முதல் ஆந்திர அரசு உருவாக்கிய திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோவில் நிர்வாகம் குழு மேற்கொண்டு வருகிறது. திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் பல லட்சக்கணக்கில் வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் சிறப்பான முறையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக குழு மற்றும் அதன் ஊழியர்கள் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

elumalayaan

இந்துக்கோயில் பாரம்பரியத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குவது ஒரு முக்கிய கடமையாக இருக்கிறது. திருப்பதிக்கு தினமும் உலகெங்கிலுமிருந்து லட்ச லட்சக்கணக் மக்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் எந்நேரமும் இலவச உணவருந்துவதற்கு பேருதவியாக இருப்பது திருப்பதி கோயில் உண்டியலில் பக்தர்கள் பணமாக போடுகின்ற காணிக்கை மற்றும் அவர்கள் கோவிலுக்கு கொடுக்கின்ற நன்கொடைகள் தான்.

- Advertisement -

Lord Perumal

இந்நிலையில் கடந்த வாரம் திருப்பதி திருமலை கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த வெளிநாட்டு வாழ் இந்திய நண்பர்கள் இருவர் சேர்ந்து, திருமாலை வழிபட்ட பிறகு திருப்பதி கோவில் சார்பில் பக்தர்கள் வசதிகளை மேம் மேம்படுத்தவும், சமூக சேவை காரியங்களில் ஈடுபடுகின்ற திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக நடத்துகின்ற பல்வேறு இயக்கங்களுக்கு 14 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்கள். அவர்களுக்கு கோயில் சார்பாக மரியாதை செய்யப்பட்டு திருப்பதி ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

money

இதே போன்று கடந்த வாரத்தில் ஐதராபாத் நகரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இரு தினங்களுக்கு முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தனது குடும்பத்தாரோடு வந்து வழிபாடு செய்த டெல்லி நகரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் திருப்பதி கோவிலில் நடைபெறுகின்ற அன்னதான சேவை நன்கொடையாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலர்கள் வழங்கினார்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupathi temple 14 crore donation in Tamil. It is also called as Tirupati temple in Tamil or Tirupati kovil in Tamil or Tirupati temple news in Tamil or Tirupati elumalaiyan kovil in Tamil.