உங்களுக்கு சொந்த வீடு, வாகனம், சொத்துகள் கிடைக்க இவற்றை செய்யுங்கள்

chandran

பணம், புகழ் போன்றவை எவருக்குமே நிரந்தரம் இல்லாதது. இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கொண்டாலே பல பிரச்சினைகளை தீர்த்து விட முடியும். எனினும் நல்ல முறையில் பணத்தை ஈட்டுபவர்கள் எதிர்கால வாழ்க்கையில் தங்களுக்கு உதவ வழிவகை செய்யும் எந்த ஒரு விடயத்திலும் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமாகும். அதிலும் உலகில் பெரும்பாலானோர் எதிர்காலத்திற்கான முதலீடு செய்வது நிலம், வீடு, வாகனம் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் தான். இத்தகைய சொத்துக்களை வாங்கும் யோகம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் எத்தகைய பரிகாரங்கள் செய்வதன் மூலம் சொத்துக்களை வாங்க முடியும் என்பதை இது தெரிந்து கொள்ளலாம்.

home

நான் தற்காலத்தில் கடினமாக உழைத்து அல்லது தொழில் வியாபாரம் செய்து ஈட்டும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக வாங்குவது எதிர்காலத்தில் நமக்கும், நமது சந்ததியினருக்கும் உதவும் ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது. ஒரு நபருக்கு மேற்கூறிய முறையில் வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை ஏற்பட அவரின் ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களுமே நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது. ஆனால் அனைவரும் இப்படி அசையும் மற்றும் அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தங்களின் திடமான இறை நம்பிக்கை, பூஜை மற்றும் முறையான பரிகாரங்களை செய்வதால் சொத்துக்கள் வாங்குகின்ற யோகம் பெற்று சிறப்பாக வாழ முடியும் என்பது பெரியோர்களின் கருத்தாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான பொருள் வளம் சேர்க்க முடியும். வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல வருமானம் கிடைத்து சொத்துக்கள் வாங்கும் யோகம் பெறவும் உங்களால் முடிந்த போதெல்லாம் பசு மாடுகளுக்கு பழம் மற்றும் அகத்திக் கீரையை கொடுத்து வருவதால், பசுமாட்டில் உறைகின்ற தேவர்களின் ஆசி கிடைக்கப்பெற்று விரைவிலேயே சொத்துக்கள் வாங்குகின்ற உங்கள் எண்ணம் நிறைவேற வழி வகை செய்யும்.

cow shed

வீட்டில் செல்வம் அதிகம் சேர நினைப்பவர்களும் லட்சுமி கடாட்சம் ஏற்படும் விரும்புபவர்களும் ஒருபோதும் கருப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்ளக் கூடாது. உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற சுமங்கலிப் பெண் வாரந்தோறும் வரும் சனிக்கிழமை தினத்தில் உங்கள் ஊரில் அல்லது கோயிலில் இருக்கின்ற ஆலமரத்திற்கு தண்ணீர் ஊற்றி, அந்த மரத்திற்கு அருகில் ஒரு தீபம் ஏற்றுவதால், உங்கள் வீட்டில் சுபிட்சங்களை பெருகச் செய்யும். கிளிகள், குருவிகள் போன்ற பறவைகளுக்கு பழம், தானியங்கள் போன்றவற்றை உணவாக கொடுப்பதால் உங்கள் வீட்டுக்கு தெய்வங்களின் அருளாசிகள் கிடைக்கச் செய்து, செல்வ வளத்தைப் பெருக்குவதோடு சொத்துக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

- Advertisement -

சந்திர பகவான் செல்வ மகளான லட்சுமி தேவிக்கு சகோதரர் என கருதப்படுகிறார். ஒரு நபருக்கு லட்சுமி கலாச்சாரம் உண்டாவதற்கு சந்திர பகவானும் உதவுகிறார். எனவே தினந்தோறும் முடிந்தவரை வெள்ளித்தட்டில் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ஜாதகத்தில் சந்திரன் பலம் அதிகரிப்பதோடு லட்சுமி கடாட்சம் ஏற்பட வழிவகுக்கிறது. தினமும் வெள்ளித் தட்டில் சாப்பிட முடியாவிட்டாலும் மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் இரவில் வெள்ளித்தட்டில் பால் சோறு சாப்பிடுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருவதோடு, வீட்டில் வளமையையும் பெருக்கச் செய்யும்.

இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் தேங்காய் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Property buying pariharam in Tamil. It is also called as Selvam peruga in Tamil or Panam peruga valigal in Tamil or Pournami pariharam in Tamil or Sothu serkkai in Tamil.