Tirupati : திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு கண்காட்சி. கோவில் நிர்வாகம் அறிவிப்பு

tirupati
- Advertisement -

வாழ்வில் பல கடினங்களை எதிர்கொண்டாலும் இறைவனின் அருள் ஒருவருக்கு கிடைக்கின்ற போது அது வரையில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடுகிறது. இதை அனைவரும் அனுபவ ரீதியாக உணரும் ஒரு கோயிலாக திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் இருக்கிறது. அதே திருப்பதி நகரத்தில் மிக பழமை வாய்ந்த கோவிந்த ராஜ பெருமாள் கோயில் இருக்கிறது. அக்கோயில் குறித்த சில தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

tirupati

வைணவர்களின் மிக புனிதமானதும், பழமையானதுமாக இருக்கும் ஒரு நகரம் திருப்பதி நகரமாகும். இந்த திருப்பதியில் ஏழுமலைகளின் மீது உலகப்புகழ் பெற்ற வெங்கடாசலபதியின் கோயில் இருக்கிறது. திருப்பதியை சுற்றிலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்த ராஜ பெருமாள் கோயில் போன்ற பல புகழ் பெற்ற பழமையான கோயில்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே திருப்பதி திருமலை தேவஸ்தான கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆகும்.

- Advertisement -

திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் இணை அதிகாரி சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பிறகு திருப்பதி கோயில் தொடர்புடைய செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு விளக்கமாக விடையளித்தார். அப்போது திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் காணாமல் போன தங்க கிரீடங்கள் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், விரைவில் அது பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும் என்று கூறினார்.

Govindaraja-Swamy-temple

மேலும் திருப்பதி அருகே இருக்கும் திருச்சானூரில் உள்ள தோட்டத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீனிவாசன் விருந்தாந்தம் என்கிற பெயரில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கண்காட்சியை பக்தர்கள் கண்டு களிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் திருப்பதியில் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் கோயில் தெப்பகுளத்தில்பெருமாள் பற்றி 20 நிமிடங்கள் வரை லேசர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதி கோயிலுக்கு இப்படியும் பல கோடி வருமானம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati govindaraja temple in Tamil. It is also called as Tirupati temple news in Tamil or Tirupathi kovilgal in Tamil or Tirupati tirumala devasthanam in Tamil or Tirupati govindaraja perumal in Tamil.

- Advertisement -