ஏழுமலையானின் ஏழுமலைகளுக்கான மந்திரம்

tirupathil

ஏழு மலைகளை தாண்டி இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பதால் அந்த பெருமாளை ‘ஏழுமலையான்’ என்று அழைக்கின்றோம். பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த ஏழு மலைகளுடன் சேர்த்து மற்ற ஏழு சிறப்புகளை பற்றியும், ஏழு மலைகளுக்கு உண்டான மந்திரத்தை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thirupathi

ஏழுமலையின் பெயர்கள்:
கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி

ஏழு தீர்த்தங்கள்:
குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி

பெருமாளின் ஏழு பெயர்கள்:
பாலாஜி, சீனிவாசன், வெங்கடேஸ்வரன், ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருமால், திருவேங்கடநாதன்.

vishnu

- Advertisement -

ஏழு தலை கொண்ட ஆதிசேஷன்:
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் ஏழு தலைகளை கொண்டுதான் காட்சி தருகின்றார். பிரம்மோற்சவத்தின் போது வெங்கடேசன் ‘பெத்தசேஷ வாகனம்’ என்ற ஏழு தலை நாக வாகனத்தில் தான் வீதி உலா வருகின்றார்.

திருப்பதியில் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்கள் ஏழு:
கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சாமி சந்நிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலோதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதள மண்டப கோவில்.

ராஜகோபுரம் ஏழு:
ஏழு மலைகளை நினைவில் கொண்டு தான் ஏழு கலச ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

tirupathi0

மகிமைகள் ஏழு:
சீனிவாச மகிமை, தல மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை

அடுத்ததாக ஏழு மலைகளுக்கு உண்டான மந்திரத்தையும் தெரிந்துகொள்வோம்.

நீலாத்ரி
tirupathi-neeladri
நீலப்பெருவரையை மேவும் நெடுமாலை,
மூலப்பொருளை, முழுமையினை- கோலத்
துளப மணிமார்பின் தூயோனை, நெஞ்சில்
உளனை ஒருவனையே நம்பு.

அஞ்சனாத்ரி:
tirupathi-anjanadri
மைக்குன்றம் கொண்டானை, மாசு மனத்தகத்தே
பொய்கின்ற வாறு புரிந்தானை – மெய்க்கென்றும்
வித்தாகி நின்றானை வேங்கடத்து மாமணியை
எத்தாலும் நெஞ்சமே ஏத்து.

கருடாத்ரி:
tirupathi-garudadri
பருந்தின் வரையுடையான் பாவனனெம் நெஞ்சில்
இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தியாம்
அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே இன்பமெலாம்
பெற்றேரும் பெறற்கரிய பேறு.

சேஷாத்ரி:
tirupathi-seshadri
பார்தாங்கும் பாந்தள் பெருநாகத் துற்றானைச்
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம் – சீர்பெற்றிம்
மண்ணிலுறை வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.

வ்ருஷபாத்ரி:
tirupathi-vrushabadri
இடபப் பெருமலையில் ஏறியவர்க்கு (உ)ண்டோ
இடரும் பிறவித் தொடரும் – சுடரும்
திருவாழி கைக்கொண்ட தெய்வத்தைப் பற்றீர்
பெருவாழ்வு பெற்றீர் பெரிது.

வேங்கடாத்ரி:
tirupathi-venkatadri
வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி – னூங்கு
திருவும் எழிலுடனும் தெய்வீகமும் சேரும்
ஒருபதியும் உண்டோ உரை.

நாராயணாத்ரி:
tirupathi-naraynadri
நாரணனின் நாமம் நமைக்காத்துப் பொய்யுறவு
தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் – பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.

தசாவதார வந்தனம்:
வேதங்கள் காத்து வியனுலகைத் தாங்கியொரு
பாதகனைக் கொன்றடக்கிப் பாரளந்து – தீதழிய
வில்லும் மழுவும் உழுபடையும் நேமியொடு
தொல்வாள் எடுத்தான் துணை.

thirupathi

பாதயாத்திரையாக 7 மலைகளை கடந்து செல்பவர்கள் ஒவ்வொரு மலையை அடையும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்து செல்பவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு கோடி புண்ணியம் ஏற்படும். உங்களின் துன்பங்கள் எல்லாம் நீங்க திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு திருப்பம் ஏற்பட இந்த மந்திரம் உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
மன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tirupati seven hills mantra in Tamil. Tirupati seven hills manthiram in Tamil. Tirupati seven hills slokas in Tamil. Tirupathi yezhu malai manthiram in Tamil.