திருப்பதி கோயிலுக்கு இந்தாண்டு கிடைத்த தங்கம் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

perumal

படிகளில் ஏறி ஏழு மலைகளை கடந்து வந்து தன்னை தரிசிக்கும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்துவைக்கும் தெய்வமாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி விளங்குகிறார். தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்ற இந்து கோயில் என பெயர் பெற்றது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். பொதுவாக திருப்பதிக்கு பெருமாலை தரிசிக்க போகும் அனைத்து பக்தர்களும், தங்களது வேண்டுகோளை பெருமாலிடம் வைப்பார்கள். அவர்கள் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காக அதற்கு காணிக்கையாக தங்களது தலையை மொட்டை அடித்துக் கொள்வதோடு, தங்களால் இயன்ற பணம், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த திருப்பதி கோவிலில் காணிக்கை குறித்த ஒரு தகவலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

tirupati

திருப்பதி திருமலை தேவஸ்தானம் அமைப்பு 1932 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட ஆந்திரபிரதேச அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு ஆகும். திருமலை திருப்பதி கோவிலின் மொத்த நிர்வாகத்தையும் இன்றுவரை சிறப்பாக கவனித்து வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம். திருப்பதி கோவில் இந்தியாவிலேயே தினந்தோறும் அதிகமாக உண்டியல் காணிக்கை வரும் கோயிலாக இன்று வரை உள்ளது. திருப்பதியில் ஏலம் போகும் முடி கூட கோடிகளில் புரளுகிறது.

திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்களிடம் இருக்கின்ற பணம் மட்டுமல்லாது நகைகள் போன்றவற்றை காணிக்கையாக கொடுப்பது பலரும் அறிந்ததுதான். சமீபத்தில் கோயிலின் சொத்து மதிப்பு பற்றிய கணக்குகளை சரிபார்த்து போது. திருப்பதி கோயிலுக்கு நகைகள் வழியில் எவ்வளவு வருமானம் வந்தது என்பதும், அதிலும் தங்க நகை மட்டும் கோயிலுக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பற்றி இறுதியான கோவில் சொத்து விவகார கணக்குகள் தெரிய வந்துள்ளன. இதைப்பற்றி கோயிலின் நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

Perumal

இந்த ஆண்டு கணக்குப்படி திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு வங்கிகளில் ஏழுமலையான் பெயரில் காணிக்கையாக செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு 9,259 கிலோ ஆகும். என் 5,387 கிலோ தங்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலும், 1,938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலின் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Today Gold rate

மேலும் பஞ்சாப் தேசிய வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருந்த திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் தங்கத்திற்கு வட்டி சேர்த்து 1,381 கிலோ தங்கமாக அந்த வங்கி திருப்பதி கோயிலுக்கு திருப்பி அளித்து விட்டதாக கூறினார். மேலும் கோவில் உண்டியலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட 553 கிலோ தங்க நகைகளை பெருமாளின் பெயரில் திருப்பதி கோவிலின் கணக்குகள் இருக்கும் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்கலாமே:
திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கே சென்றாலே போதும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati temple gold deposit in Tamil. It is also called as Tirupati kovil in Tamil or Tirupati thirumalai devasthanam in Tamil or Tirupati perumal koil in Tamil.