திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? – விவரங்கள் உள்ளே

tirupati
- Advertisement -

ஏழுமலை குன்றுகளை கொண்ட திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி எனும் பெயரில் பக்தர்கள் அனைவருக்கும் அருள் புரிகின்ற திருமலையாண்டவராகிய வெங்கடாசலபதியை தரிசிப்பதற்கு தினமும் ஆயிரம் அல்லது லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். உலகிலேயே ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்யும் ஒரு சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலமாக இந்த திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் இருக்கிறது. இந்த திருமலை திருப்பதி கோயில் உலகளவில் கவனம் கவனம் பெற்ற ஒரு வழிபாட்டு தலமாகும் அந்த திருப்பதி திருமலை கோயில் குறித்த ஒரு தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

tirupati

தினமும் லட்சக் கணக்கில் வருகின்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முறையாக கிடைப்பதற்கு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, சிறந்த நிர்வாகத் திறமை பெற்ற ஒரு குழுவாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகக் குழு புகழ் பெற்றுள்ளது. இப்படிப் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பல ஆண்டு காலமாகவே இந்தியாவிற்கு வெளியில் இருந்து இயங்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்திய அரசு காஷ்மீர் பகுதியை இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம் என அறிவித்ததிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக மிக அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள் போன்றவற்றில் அவர்களின் தாக்குதல் நடைபெறலாம் என கருதி பல கோவில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

தினந்தோறும் இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்ற ஒரு கோயிலாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் இருப்பதால், அக்கோயில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய இலக்குகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததை அடுத்து எச்சரிக்கையான ஆந்திர அரசு திருப்பதி கோயில் பகுதியில் இருக்கும் மற்ற கோவில்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

terrorists

இன்னும் சில வாரங்களில் திருப்பதி திருமலை கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற இருப்பதால், ஒரு மாத காலத்துக்கு பல லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பதிக்கு வரவிருப்பதால் திருப்பதி நகரை சுற்றிலும் திருமலையிலும் தீவிர வாகன தணிக்கை ஆந்திர காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது. வெடிகுண்டுகளை கண்டறியும் காவல்துறையின் மோப்ப நாய் படை பிரிவு மற்றும் அதி நவீன கருவிகளைக் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் திருப்பதி திருமலை கோயிலில் தீவிரமான தேடுதல் மற்றும் சோதனை பணிகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

octopus police

திருப்பதி நகரம் அமைந்திருக்கும் சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் பேசியபோது மத்திய உளவுத்துறை தந்த தகவலின் திருப்பதி கோயில் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறை அதிகாரிகள் மிகத் தீவிரமாக சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற ஆந்திர காவல்துறையின் அதிரடி படையான “ஆக்டபஸ்” படை பிரிவு திருப்பதி கோயிலில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனையை தீர்க்கும் தாந்திரீக பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati temple red alert in Tamil. It is also called as Tirupati venkatachalapathy in Tamil or Terrorists in Tamil or Tirupati darisanam in Tamil or Tirupati elumalaiyan koil in Tamil.

- Advertisement -