திருப்பதி கோவில் உண்டியலில் இருந்த விலை உயர்ந்த தங்க நகை காணிக்கை

Tirupati perumal hundi
- Advertisement -

திருப்பதி கோவிலில் தினந்தோறும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவது வழக்கம். அதனை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் வங்கிகளில் வரவு வைப்பது வழக்கமான ஒன்று. பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.

tirupati

நேற்று திருப்பதி உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் இருந்த தங்க நகைகளில் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க ஆபரணம் ஒன்று இருந்தது. யார் அந்த காணிக்கையை செலுத்தி உள்ளார் என்பது தெரியவில்லை. அதன் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நேற்று 92 ஆயிரத்து 736 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 30 ஆயிரத்து 738 பேர் மொட்டையிட்டு நேர்த்திகடன் செலுத்தி இருந்தனர். உண்டியலில் ரொக்கம் மட்டும் ரூ.2 கோடியே 81 லட்சம் வசூலானது . தரிசன நேரம் 20 மணி நேரமானது.

elumalayaan

திருப்பதி ஏழுமலையான் பெயரில் நிர்வாகம் தொடங்கியுள்ள பல அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகள் கொடுத்து வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று நன்கொடையாக வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.19 லட்சம். அதில் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.6 லட்சம், கோ சம்ர‌ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருந்து அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் ஆகும்.

- Advertisement -

மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கை குழந்தைகள் வைத்திருப்போர் எளிதாக தரிசனம் செய்ய மாதம் இரு தினங்கள் தேவஸ்தானம் ஒதுக்கி வைத்துள்ளது. இந்த திட்டத்தின் படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Perumal

அதே போல இன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கபடவிருக்கிறது. இந்த வாய்ப்பை பக்தர்கள் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் இந்த வாரம் முழுவதும் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -