திருப்பதி கோயிலில் நீங்களும் விஐபி தர்சினம் பெற இதை செய்தால் போதும்

tirupathi-thirupam

ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அலை மோதினாலும் ஒரு 10,000 ரூபாய் கொடுத்தால் மட்டும் போதும் நீங்களும் வி.ஐ.பி ஆகலாம். (ஏனெனில் பணம் பத்தும் செய்யும் உங்களை திருப்பதிக்கு ஒருநாள் வி.ஐ.பி ஆக்கவும் செய்யும்).

tirupati

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் இனி இருக்காது. ஏனெனில் தற்போது கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள அறிவிப்பு என்னவென்றால், புதிதாக தொடங்கியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை நாம் தந்தால் இலவசமாக ரூபாய் 500 மதிப்புள்ள வி.ஐ.பி தரிசன நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தேவஸ்தான போர்டு அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது,. பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். எனவே, திருப்பதியில் எவ்வளவு தான் கூட்டம் அலைமோதி நாளும் நம்மிடம் ரூபாய் 10,000 பணம் மட்டும் இருந்தால் திருப்பதியில் நாமும் விஐபி ஆகலாம்.

tirupati

கவுனி தாண்டுதல்:

- Advertisement -

திருப்பதியில் சில நாட்களுக்கு முன்பு பிரம்மோற்சவம் நடைபெற்றது. வட சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக மிகப்பெரிய அளவிலான விழாவாக எடுத்துச்செல்லப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை.

ஏழுமலையான் தனது திருமணத்திற்காக யானைகவுனியில் கடன் வாங்கி இருந்தாராம். அதனால் அந்த பகுதி வரும் போது நிற்காமல் குடையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவார்களாம்.. இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள்.

tirupati

நன்கொடைகள் எவ்வளவுதான் பெறப்பட்டாலும், 10,000 ரூபாய் டிக்கெட்டுகளை விற்றாலும், ஏழுமலையான் பட்ட கடன் மட்டும் இன்னும் தீரவில்லை.