உங்களுடைய வீட்டை இந்த 4 பொருட்கள் சேர்த்து, இப்படி துடைத்து சுத்தம் செய்தால் தான், நீங்கள் செய்யும் பூஜைக்கு கூட முழுமையான பலன் கிடைக்கும்.

clean-pooja

நம் குடும்பத்தின் நன்மைக்காக, நாம் செய்யும் பூஜை புனஸ்காரங்களும், பரிகாரங்களும் முழுமை அடைந்தால் தான், நம் கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும். ‘நான் செய்யாத பரிகாரமே கிடையாது. நான் செய்யாத பூஜையே கிடையாது. ஆனால் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டம்.’ என்று இன்றளவும் இறைவனிடம் புலம்பி தீர்ப்பவர்கள் அதிகமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த சின்ன குறையை கூட நிறையாக மாற்றும் ஒரு விஷயம் தான் இது. வீட்டை துடைப்பது கூடவா பிரச்சனை! என்று நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் இந்தக் குறையை கூட நம் விட்டு வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு.

poojai arai

நம் வீட்டில் எந்த ஒரு பூஜையை செய்வதற்கு முன்பாகவும் வீட்டை துடைத்து, சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். அப்படி சுத்தம் செய்வது எதற்காக? நம் வீட்டில் செய்யப்படும் நல்ல காரியமானது எந்த ஒரு எதிர்மறை ஆற்றலினாலும் தடை பட்டு விடக் கூடாது. எந்த ஒரு தீட்டினாலும் அபசகுணம் நடந்து விடக்கூடாது, என்பதற்காகத்தான். இந்த சுத்தகத்தை முழுமையாக நாம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?

சில பேர் தங்களுடைய வீடுகளை துடைக்கும் போது தண்ணீரில் கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு போட்டு துடைப்பார்கள். இது மிகவும் நல்ல பழக்கம். ஆனால் இந்த பழக்கத்தின் மூலம் நம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் அழிந்துவிடும். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை முழுமையாக போக்கும் சக்தி இதற்கு முழுமையாக கிடைக்காது. நம் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த கல் உப்பை சேர்க்கும்போது, சிறிதளவு மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு ஸ்பூன் கோமியம் இவைகளையும் சேர்த்து வீட்டை துடைப்பது நல்ல பலனைத்தரும். குறிப்பாக நாளை நம் வீட்டில் பூஜை செய்யப் போகிறோம் என்றால் அதற்கு முன்நாள் இப்படித்தான் வீட்டை துடைக்க வேண்டும்.

salt

மற்ற சாதாரண தினங்களில் கல் உப்பை மட்டும் சேர்த்து வீடு துடைப்பது மிகவும் சிறப்பானது. உங்கள் வீட்டில் அடுத்த நாள் பூஜை என்றால் முன்னால் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது கட்டாயம் இந்த பொருட்களெல்லாம் சேர்த்து உங்களது வீட்டை துடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களது வீட்டில் செய்யப்படும் பூஜை முழுமையாக நிறைவடையாமல், இருப்பதற்கு இந்த சின்ன தவறு கூட காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். தினம்தோறும் வீட்டை துடைக்க வெறும் கல்லுப்பு போதும். இதேபோல் வீட்டினை துடைத்து வரும்போது உள் பக்கத்தில் இருந்து, வெளிப்பக்கம் பார்த்தவாறு தொலைத்து வரவேண்டும். முடிந்தவரை 12 மணிக்குள் வீட்டை சுத்தம் செய்து விட பாருங்கள்.

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் இந்த முறைகளை எல்லாம் கடைப்பிடித்தார்களா? அவர்கள் செய்த பூஜை முறைகள் முழுமை பெற வில்லையா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். அந்த காலத்திலெல்லாம் தீயசக்திகள் வாசலிலேயே நின்று விடும். சாணம் மெழுகி, மாக்கோலம் போட்டு, காவி தீட்டி வைத்திருப்பார்கள். எதிர்மறை ஆற்றல் எதுவும் வீட்டிற்குள் வர அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல் வீட்டின் மூலை முடுக்குகளில் தண்ணீர் ஊற்றி கழுவுவது என்பது மிகப் பெரிய வரம். இந்த காலகட்டத்தில் அப்படியா? தண்ணீர் போக வழியில்லாமல் வீட்டைக் கட்டி விடுகின்றோம். காலத்திற்கு ஏற்றவாறு சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

traditional

சில வீட்டில் சாமி கும்பிட்ட பின்புதான் பிரச்சினையே தொடங்கும். சாமி கும்பிடுவது எதற்காக? மன நிம்மதிக்காக. வீட்டில் சுவாமியை கும்பிட பிறகும் பிரச்சினையா? இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் இப்படி வீட்டை துடைத்துவிட்டு இறைவனுக்கு பூஜை செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
கொரோனாவால் மூடப்பட்ட திருப்பதி கோவில். அங்கிருந்த 2 லட்சம் லட்டுக்கள் என்ன ஆனது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veedu sutham Tamil. House clean. Vettai suthamaga vaipathu eppadi. Vettai suthamaga vaithu kolvathu eppadi. Veedu sutham Tamil. Veedu thudaithal.