- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர புதாஷ்டமி வழிபாடு

கடன் தீர புதாஷ்டமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவர் வாழ்வையும் பாடாய்ப்படுத்தக் கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமானதாக கருதப்படுதவது இந்த கடன் தொல்லை தான். கடன் தொல்லையால் காணாமல் போன எத்தனையோ குடும்பங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் நாமே கூட பார்த்திருப்போம். ஏன் இந்த பட்டியலில் நாமும் கூட இருப்போம் இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அப்படியான கடன் தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கக் கூடிய தெய்வங்களில் முக்கியமானவராய் கருதப்படுபவர் வைரவர். இந்த பைரவரை நாளைய அஷ்டமி நாளில் எப்படி வழிபட்டால் நம்முடைய கடன் தீரும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர அஷ்டமி வழிபாடு

பைரவருக்கான வழிபாட்டு தினங்களில் அஷ்டமி மிகவும் முக்கியமானது அதுவும் சில தினங்களில் வரக் கூடிய அஷ்டமி மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையில் வரக் கூடிய அஷ்டமி சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல் புதன்கிழமையில் வரக் கூடிய அஷ்டமிக்கும் தனி சிறப்புகள் உண்டு.

நாளைய தினம் புதன்கிழமையுடன் இந்த அஷ்டமி இணைந்து வந்திருப்பது நம்முடைய கடன் தொல்லை முற்றிலும் தீர நமக்கு வாய்த்த ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். நாளைய தினம் பைரவருக்கு நாம் ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் இதை கட்டாயமாக ஆலயத்தில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் வைரவர் இருக்கும் சன்னதிக்கு சென்று அங்கு அவருக்கு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி செல்லும் முன் வீட்டில் இருந்து 35 மிளகுகளை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதே போல் எட்டு மூட்டைகளை கட்டி தயார் செய்து கொள்ளுங்கள். அதே போல் எட்டு அகல் விளக்கு, வேப்பெண்ணை இவை அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள்.

பைரவருக்கு முன்பாக இந்த அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி மிளகு மூட்டையை அதில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு பைரவருக்கு முன்பாக அமர்ந்து பைரவ அஷ்டோத்திரத்தை சொல்லலாம் தெரியாதவர்கள் ஓம் பைரவாய நமக என்ற மந்திரத்தை மனதார ஜெபித்தாலே போதும். இந்த நேரத்தில் உங்களுடைய கடன்கள் தீர்ந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பைரவரை எட்டு முறை வளம் வந்து வணங்க வேண்டும். நாளைய தினத்தில் இந்த தீப வழிபாடு செய்வது நல்ல பலனை தரும் முடிந்தால் நாளைய தினத்திலிருந்து 8 அஷ்டமிகள் தொடர்ந்து இது போல ஏற்றுங்கள். அப்படி ஏற்ற முடியாதவர்கள் நாளைய தினத்தில் மட்டும் ஏற்றினால் கூட போதும். இந்த வழிபாடு உங்களுடைய தீராத கடன் அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சாயாதேவி வழிபாடு

அதே போல் நல்ல பண வரவையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் கடன் அடைந்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. கடன் என்னும் கர்மா கரைந்து நிம்மதியாக வாழ இந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

சற்று முன்