இன்றைய எண்கணித பலன்கள் – ஆகஸ்ட் 01 2022

numerology-01-august
- Advertisement -

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஆகஸ்ட் 01 1981 எனில்:
மாதம்: 08 = 0+8 = 8
தேதி: 01 = 0+1 = 1
வருடம்: 1981= 1+9+8+1 = 19 = 1+9 = 10 = 1+0 = 1
மொத்தம்: 8+1+1 = 10 = 1+0 = 1

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிட வேண்டும். மேலே கூறியபடி ஆகஸ்ட் 01 1981இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 1. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்போது இன்றைய நாளுக்கான உங்களுடைய அதிர்ஷ்ட எண் பலனை பார்ப்போம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 1:
உங்கள் எண்ணிற்கு இன்று நடப்பவை யாவும் நன்மைக்கே நடக்கும். நிஜங்களும் தோற்றுப் போக வாய்ப்புகள் உண்டு முயற்சியை கைவிடாதீர்கள். கவலைகள் நீங்க புதிய பாதைகள் பிறக்கும். எதிலும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது.
இன்றைய ராசியான நிறம்: மஞ்சள்

அதிஷ்ட எண் 2:
உங்கள் எண்ணிற்கு இன்று வீண் பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படும் தவிர்ப்பது நல்லது. சிக்கலான பிரச்சனையும் சுலபமாக முடியும். உங்களுடைய பலம் அதிகரிக்க திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. நினைத்தது நடக்கும் என்றாலும் அதில் இழுபறி இருக்கும். மன உளைச்சல் குறையும்.
இன்றைய ராசியான நிறம்: சிகப்பு

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 3:
உங்கள் எண்ணிற்கு இன்று நீங்கள் புதுமையை படைக்க கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். பலவீனங்களை நீக்கி பலம் அதிகரிக்க மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் ஆதாயம் காணலாம். எதிர்பாராத பணவரவு சிறப்பாக அமையும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
இன்றைய ராசியான நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண் 4:
உங்கள் எண்ணிற்கு இன்று நீங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மனதை அலைபாய விடாமல் மனக்கட்டுப்பாடு கொள்வது நல்லது. ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கண்களால் எவரையும் எளிதில் கவர்வீர்கள். கற்பனைகளை சிறகடிக்க விடாமல் இருப்பது நல்லது.
இன்றைய ராசியான நிறம்: மஞ்சள்

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 5:
உங்கள் எண்ணிற்கு இன்று பதற்றம் நீடிக்கும். எடுக்க வேண்டிய முடிவுகளை தீர்க்கமாக எடுப்பது நல்லது. எது தேவை? என்பதை தீர்மானிக்க வேண்டிய அதிர்ஷ்ட நாளாக இருக்கப் போகிறது. உடன் இருப்பவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. கொடுத்த வாக்கில் நிற்பது நலம் தரும்.
இன்றைய ராசியான நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண் 6:
உங்கள் எண்ணிற்கு இன்று தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். வருமானம் கணிசமாக உயரும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். தேவையற்ற யோசனைகளில் இருந்து வெளியில் வருவது நல்லது.
இன்றைய ராசியான நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண் 7:
உங்கள் எண்ணிற்கு இன்று நீங்கள் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பின்னால் சிலர் பேசுவதை கண்டு தளர்ந்து போக வேண்டாம். எதிர்பாராத செலவு உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்களை சுற்றி இருக்கும் எதிர்ப்புகள் அடங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
இன்றைய ராசியான நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்டமான எண் 8:
உங்கள் எண்ணிற்கு இன்று நீங்கள் உங்களுடைய சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய பலவீனம் மறையும். எதிர்பாராத இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் உளைச்சலை தவிர்க்கலாம். கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.
இன்றைய ராசியான நிறம்: வெள்ளை

அதிர்ஷ்டமான எண் 9:
உங்கள் எண்ணிற்கு இன்று நீங்கள் எடுத்த முடிவுகளில் இடையூறுகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை தேவை. போட்டியாளர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தொலைத்த பொருள் ஒன்று தானாக கிடைக்கும். புதிய முயற்சிகளை துவங்குவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்றைய ராசியான நிறம்: பச்சை

- Advertisement -