இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 26 2022

numerology-26-july
- Advertisement -

எண் கணித பலன்களின் படி உங்களுக்கு அதிர்ஷ்டமான எண்கள் என்னென்ன மாதிரியான பலன்களை இன்று கொடுக்கப் போகிறது என்பதை கணிக்கலாம். உங்களுடைய அதிர்ஷ்டமான எண் எதுவாயினும் அதன் கூட்டு எண்ணிக்கை ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களில் அடங்கி இருக்கும். அதன் அடிப்படையில் இன்றைய நாள் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பது நடக்குமா? நடக்காதா? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஜூலை 26 1987 எனில்:
மாதம்: 07 = 0+7 = 7
தேதி: 26 = 2+ 6 = 8
வருடம்: 1987= 1+9+8+7 = 25 = 2+5 = 7
மொத்தம் : 7+8+7 = 22 = 2+2 = 4

- Advertisement -

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிடவேண்டும். மேலே கூறியபடி ஜூலை 26 1987இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 4. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம். இப்போது இந்த நாளுக்கான உங்களுடைய பலனை பார்ப்போம்.

அதிர்ஷ்ட எண் 1:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 1 என்றால் நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் துரிதமாக இருப்பது நல்லது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், இருப்பது கைவிட்டு போய்விடும். நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் அடைய வேண்டும் என்றால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

அதிஷ்ட எண் 2:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 2 என்றால் நீங்கள் கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். கோபம் எதிர்பார்ப்பதை நடக்க விடாமல் தடுத்துவிடும் எனவே நிதானத்தை கையாளுவது இன்றைய நாளை உங்களுக்கு அதிர்ஷ்டமாக்கி கொடுக்கும். பகல் நேர உறக்கத்தை தவிர்த்தால் நினைத்ததை சாதிக்கலாம்.

அதிர்ஷ்ட எண் 3:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 3 என்றால் நீங்கள் இன்றைய நாளில் மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் மனம் அறிந்து செயல்பட்டால் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். தேவையற்ற கேள்விகளுக்கு விடை தேடாமல் இருப்பதே நல்லது.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 4:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 4 என்றால் இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் சில காலமாக நடக்கவில்லையே என்று தாமதப்பட்ட ஒரு விஷயம் நடக்கும். அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் மனதை சமநிலைப்படுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட எண் 5:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 5 என்றால் இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக சொல்லும் சொல்லில் இனிமை தேவை. வாக்குவாதங்கள் உங்களுடைய நிம்மதியை தொலைத்து விட வாய்ப்புகள் உண்டு எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண் 6:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 6 என்றால் நீங்கள் இன்றைய நாளில் தாம் தூம் என்று செலவு செய்யாமல் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. இங்கொன்றும் அங்கொன்றுமாக மாற்றி மாற்றி பேசாமல் ஒரு விஷயத்தை ஒரே மாதிரி பேசுவது நல்லது. உங்களுக்கு அறிமுகம் இல்லாத மனிதர்களிடமிருந்து தள்ளியே இருங்கள்.

அதிர்ஷ்ட எண் 7:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 7 என்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் உங்கள் மனதை பறி கொடுக்க வாய்ப்புகள் உண்டு. மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்த முயற்சிப்பது உத்தமம். உங்களுடைய நேர்மையான அணுகுமுறை மற்றவர்களை எளிதில் கவரக்கூடும்.

அதிர்ஷ்டமான எண் 8:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 8 என்றால் இன்றைய நாள் நீங்கள் பாரம்பரிய நெறிமுறைகளை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்ப்பது நடக்க வழக்கத்தை காட்டிலும் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. நிதி நிலையில் சிக்கல்கள் நீடிக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான எண் 9:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 9 என்றால் நீங்கள் இந்த நாள் யோகமான பலன்களை பெற போகிறீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனம் பல இடங்களில் வெற்றி வாய்ப்புகளை பெற்றுத் தரும். விடாப்பிடியான உங்களுடைய முயற்சிக்கு நீங்கள் நினைத்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

- Advertisement -