இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 27 2022

numerology-27-july
- Advertisement -

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஜூலை 27 1982 எனில்:
மாதம்: 07 = 0+7 = 7
தேதி: 27 = 2+7 = 9
வருடம்: 1982= 1+9+8+2 = 20 = 2+0 = 2
மொத்தம் : 7+9+2 = 18 = 1+8 = 9

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிட வேண்டும். மேலே கூறியபடி ஜூலை 27 1982இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 9. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 1:
அதிர்ஷ்ட எண் 1 என்பவர்களுக்கு எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மற்றவர்களின் மனதை எளிதாக கணித்துக் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனை கேட்டு முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது.

அதிஷ்ட எண் 2:
அதிர்ஷ்ட எண் 2 என்பவர்களுக்கு இன்று எதிர்பாராத அனுபவங்கள் கிடைக்க கூடியதாக இருக்கிறது. உடன்பிறப்புகளுடன் அனுசரிப்பு தேவை. பணம் நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் திட்டமிட்டு எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்துவது உசிதமானது.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 3:
அதிர்ஷ்ட எண் 3 என்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடிய அற்புதமான பலனாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விரைவாக முடிய வேண்டிய வேலை இழுப்பறியில் இருக்கக்கூடும். பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட எண் 4:
அதிர்ஷ்ட எண் 4 என்பவர்களுக்கு மறைமுக மற்றும் நேர்முக எதிர்ப்புகள் வலுவாகும். கொடுத்த கடனை கட்டுவதில் சிரமங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்க துவங்கும். பெண்களால் நன்மைகள் உண்டாக கூடிய பலனாக இருக்கிறது. பகைவர்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 5:
அதிர்ஷ்ட எண் 5 என்பவர்களுக்கு மனதில் திடம் கூடும். புது தன்னம்பிக்கை மலர ஆரம்பிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் மறையும். தடைகளை தகர்த்து எறிந்து வெற்றி நடை போடக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் யோகத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் 6:
அதிர்ஷ்ட எண் 6 என்பவர்களுக்கு வாயால் கெட்டுப் போகும் வாய்ப்பு உண்டு எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சை குறைப்பது ரொம்பவே நல்லது. பணத்தை வீண் விரையம் செய்யாமல் தேவையான விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்தால் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வண்டி, வாகனத்தில் பிரச்சனைகள் உண்டாகும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண் 7:
அதிர்ஷ்ட எண் 7 என்பவர்களுக்கு புத்தி மழுங்கி போய் தேவையற்ற விஷயங்களில் தலையிட வாய்ப்புகள் உண்டு. வேகத்தை விட விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைப்பது நல்லது. அடுத்தவர்களுடைய தவறை சுட்டிக் காட்ட முயற்சிக்க வேண்டாம்.

அதிர்ஷ்டமான எண் 8:
அதிர்ஷ்ட எண் 8 என்பவர்களுக்கு சாதுரியமான பேச்சாற்றல் நிறைய காரியங்கள் சாதிக்க உதவும். வீண் அலைச்சலால் அசதி ஏற்படலாம். கிடைக்கின்ற வாய்ப்புகளை தவற விட்டு விட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். நீண்ட நாட்களாக மனதிற்கு பிடித்த ஒரு பொருளை வாங்க கூடிய வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டமான எண் 9:
அதிர்ஷ்ட எண் 9 என்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் பல தடைகளை தாண்டி வெற்றி பெறும் யோகம் உண்டு எனவே பொறுமை காப்பது நல்லது. விரோதிகளும் நண்பர்களாக வாய்ப்புகள் அமையும். சொந்த பந்தங்களால் வருத்தங்கள் உண்டாகக்கூடும். தன்னம்பிக்கை தளர ஆரம்பிக்கும் எனவே எதையும் பொருட்படுத்தாமல் முயற்சியை மட்டும் கைவிடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -