இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 28 2022

numerology-28-july
- Advertisement -

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஜூலை 28 1993 எனில்:
மாதம்:07 = 0+7 = 7
தேதி: 28 = 2+8 = 10
வருடம்: 1993= 1+9+9+3 = 22 = 2+2 = 4
மொத்தம் : 7+10+4 = 21 = 2+1 = 3

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிட வேண்டும். மேலே கூறியபடி ஜூலை 28 1993இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 3. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 1:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 1 என்றால் இன்று எதிர்பாராத நற்செய்திகளை பெறலாம். புதிய பாடம் ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். எவரையும் முழுமையாக தெரியாமல் எடை போட வேண்டாம். கேட்பார் சொல் கேட்டு ஆடினால் அவமானப்பட வேண்டி இருக்கும்.

அதிஷ்ட எண் 2:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 2 என்றால் இன்று ரொம்பவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். அடைபட்டுக் கொண்டிருந்த கதவு ஒன்று திறந்தது போல இருக்கும். புதிய பாதைகள் பிறக்கும். நடக்குமா? நடக்காதா? என்று நினைத்தது ஆச்சரியப்படுத்தும் வகையில் நடக்கும்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 3:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 3 என்றால் பேச்சில் கவனம் தேவை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பேசினால் அவமானப்பட வேண்டி இருக்கும். கிடைக்க வேண்டியது காலதாமதப்படலாம். பொறுமை காப்பது நல்லது. வேற்று மதத்தவரின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் 4:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 4 என்றால் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்த வாங்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மஞ்சள் நிற உடை உங்களுக்கு இன்று அதிர்ஷ்ட பலனை பெருக்கிக் கொடுக்கும்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 5:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 5 என்றால் அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒரு விஷயத்தை செய்வதால் என்னென்ன பாதிப்புகள் வரும்? என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள். முகப்பொலிவு கூடும். மனதில் புது உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் 6:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 6 என்றால் சொல்லும் சொல்லில் கவனம் தேவை. வார்த்தையை அள்ளி வீசிவிட்டால் பிறகு தர்ம சங்கடத்திற்கு ஆளாவீர்கள். புதிய நட்பில் கவனம் தேவை. எவரையும் குறைவாக எடை போட வேண்டாம். சுயமதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட எண் 7:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 7 என்றால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுடைய சதுரயமான பேச்சாற்றல் மற்றவர்களை எளிதாக கவரும் வண்ணம் இருக்கும். மனோதிடம் கூடும் என்பதால் முடிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை முடித்து விடுவது நல்லது.

அதிர்ஷ்டமான எண் 8:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 8 என்றால் மற்றவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய எல்லா ரகசியங்களையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. எதையும் அலசி ஆராயாமல் ஆவேசப்பட்டு விடாதீர்கள். எதிர்பாராத பணம் வரும்.

அதிர்ஷ்டமான எண் 9:
உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 9 என்றால் இன்று ஒரு படிப்பினையை கற்றுக் கொள்வீர்கள். நண்பனும் எதிரியாவான் எச்சரிக்கை தேவை. கவலைகளை மறந்து சரியான பாதையில் பயணிப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகள் எழக்கூடும் எனினும் மனதை கட்டுப்படுத்தி கொள்ள முயற்சி செய்வது நல்லது.

- Advertisement -