இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 29 2022

numerology-29-july
- Advertisement -

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஜூலை 28 1980 எனில்:
மாதம்: 07 = 0+7 = 7
தேதி: 28 = 2+8 = 10
வருடம்: 1980= 1+9+8+0 = 18 = 1+8 = 9
மொத்தம் : 7+10+9 = 26 = 2+6 = 8

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிட வேண்டும். மேலே கூறியபடி ஜூலை 28 1980இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 8. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்போது இன்றைய நாளுக்கான உங்களுடைய அதிர்ஷ்ட எண் பலனை பார்ப்போம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 1:
அதிர்ஷ்ட எண் ஒன்றுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். குழப்பங்கள் தொடர்ந்து வந்தது முடிவுக்கு வரும். நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். நீங்கள் நடக்குமா? என்று நினைத்த காரியம் ஒன்று சுலபமாக நடக்கும்.

அதிஷ்ட எண் 2:
அதிர்ஷ்ட எண் இரண்டுக்கு இன்றைய நாள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். உங்கள் மனோதிடம் அதிகரிக்கும். புதிய தன்னம்பிக்கை துளிர் விடக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பகைவர்களும் உங்களை மன்னிக்கக்கூடும்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 3:
அதிர்ஷ்ட எண் மூன்றுக்கு இன்றைய நாள் உங்கள் திறமை அறிந்து செயல்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் இழுப்பறியில் இருந்து வந்த கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கும். சகிப்புத்தன்மை தேவை இல்லையேல் வீண் பிரச்சனை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் 4:
அதிர்ஷ்ட எண் நான்கிற்கு இன்றைய நாள் நண்பர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. சக பணியாளர்களுடன் வாக்குவாதங்கள் நிகழலாம். முண்டியடித்துக் கொண்டு செல்லாமல் பொறுமை காத்தால் வெற்றி காணலாம். புதுமை படைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களிடம் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 5:
அதிர்ஷ்ட எண் ஐந்திற்கு இன்றைய நாள் அனுகூலம் தரும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. கலைத்துறையில் சாதிப்பீர்கள். தடைகளை தகர்த்து வெற்றி நடை போடக்கூடிய வாய்ப்புகள் பல வழிகளில் இருந்து வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண் 6:
அதிர்ஷ்ட எண் ஆறிற்கு இன்றைய நாள் கேட்டது கிடைக்கும் நல்ல நாளாக இருக்கிறது. பலமுறை சொல்ல தயங்கிய ஒரு விஷயத்தை சொல்லி விடுவது நல்லது. வியாபாரிகள் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். முடிந்தவரை துரிதமாக முடிவு எடுப்பது நல்லது. பாத்திரம் அறிந்து பிச்சை போடுவது நல்லது.

அதிர்ஷ்ட எண் 7:
அதிர்ஷ்ட எண் ஏழிற்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சொல்லும் சொல்லில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பயணங்கள் மூலம் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். மனதில் இருக்கும் தேவையற்ற வன்மத்தை நீக்குவது நல்லது.

அதிர்ஷ்டமான எண் 8:
அதிர்ஷ்ட எண் எட்டிற்கு இன்றைய நாள் வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. விபரீத சிந்தனை வேண்டாம். எதிர்பார்க்கும் அன்பு கிடைக்கும். வெற்றி பயணம் பல இடையூறுகளை சந்திக்கும். தேவையற்ற மன பயத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான எண் 9:
அதிர்ஷ்ட எண் ஒன்பதிற்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனக்கட்டுப்பாடு தேவை. உங்களுடைய புத்திசாலித்தனம் வெற்றியை ஈட்டி தரும். தீராத இடியாப்ப சிக்கலும் தீர கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு. எதிரியும் நண்பன் ஆவான்.

- Advertisement -