இன்றைய எண்கணித பலன்கள் – ஜூலை 30 2022

numerology-30-july
- Advertisement -

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஜூலை 30 1975 எனில்:
மாதம்: 07 = 0+7 = 7
தேதி: 30 = 3+0 = 3
வருடம்: 1975= 1+9+7+5 = 23 = 2+3 = 5
மொத்தம்: 7+3+5 = 15 = 1+5 = 6

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிட வேண்டும். மேலே கூறியபடி ஜூலை 30 1975இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 6. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்போது இன்றைய நாளுக்கான உங்களுடைய அதிர்ஷ்ட எண் பலனை பார்ப்போம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 1:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஒன்றிற்கு நீங்கள் நினைத்தது நடக்கும். தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும். எதிர்கால கனவுகள் அதிகரிக்கும். வீண் பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் மிச்சமாகும். செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு உண்டாகும்.

அதிஷ்ட எண் 2:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் இரண்டிற்கு கனவுகள் மெய்ப்பட போகிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று நினைத்தது மாறப் போகிறது. தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் தொடர் முயற்சி செய்தால் வெற்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமாகும். வீண் பேச்சை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 3:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் மூன்றிற்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய இனிய நாளாகும். காணாமல் போன சில விஷயங்கள் உங்களை தேடி தானாகவே வந்து சேரும். சொன்ன சொல்லில் இருந்து மாறாமல் இருப்பது நல்லது. நண்பர்களால் சுப பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் 4:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் நான்கிற்கு தொலைவில் இருக்கும் விஷயமும் உங்கள் வசப்படும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். கண்களால் காதல் வயப்பட வாய்ப்புகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 5:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஐந்திற்கு புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். விமர்சனங்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் உங்கள் காரியத்தை எளிதாக சாதித்துக் கொள்ளலாம். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட எண் 6:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஆறிற்கு அவிழ்க்க முடியாத அவிழ்ந்துவிடும் யோகம் உண்டு. புதிய நட்பு மலரும் வாய்ப்பு உண்டு. பணத்தாசை காட்டினால் ஏமாந்து போகாதீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துங்கள். மனசாட்சிப்படி செயல்பட்டால் வம்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட எண் 7:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஏழிற்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் பணத்தை சேமிப்பதில் அக்கறை கொள்ளுங்கள். திட்டமிட்ட காரியம் சிதறாது. சிந்தனை முழுவதும் நேர்மறையாக இருப்பது நல்லது. விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. எதிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்டமான எண் 8:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் எட்டிற்கு கவலைகள் மறக்கும் அமைதி பிறக்கும் இனிய நாளாகும். உங்களுடைய நகைச்சுவை திறமையால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை குறையாமல் நடந்து கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான எண் 9:
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஒன்பதிற்கு கேட்டது கிடைக்கும் அற்புதமான அமைப்பாகும். தொலைத்த ஒன்று கையை தேடி வரும். கனவுகளில் மூழ்கி போகாமல், கற்பனையில் இருந்து வெளியில் வருவது நல்லது. கண் கவர் விஷயங்களை விடுத்து ஆரோக்கியத்தில் நாட்டம் செலுத்துங்கள். புதுமையை படையுங்கள்.

- Advertisement -