இன்றைய எண்கணித பலன்கள் – ஆகஸ்ட் 1 2022. உங்கள் அதிஷ்ட எண் படி உங்களுக்கான இன்றைய பலன்

Numerology
- Advertisement -

உங்கள் அதிஷ்ட எண்ணை கணக்கிடும் முறை: உங்கள் பிறந்த தேதி ஜூலை 31 1989 எனில்:
மாதம்: 07 = 0+7 = 7
தேதி: 31 = 3+1 = 4
வருடம்: 1989= 1+9+8+9 = 27 = 2+7 = 9
மொத்தம்: 7+4+9 = 20 = 2+0 = 2

இப்படி ஒற்றை இலக்க எண் வரும் வரை கணக்கிட வேண்டும். மேலே கூறியபடி ஜூலை 31 1989இல் பிறந்தவரின் அதிஷ்ட எண் 2. இப்படியாக உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்போது இன்றைய நாளுக்கான உங்களுடைய அதிர்ஷ்ட எண் பலனை பார்ப்போம்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 1:
அதிர்ஷ்ட எண் 1 க்கு இன்றைய நாள் சுகம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. நடப்பவை யாவும் நன்மைக்கே அமையும் என்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பயணங்கள் மூலம் அதிர்ஷ்டம் காணலாம். பகைவனும் உங்களை புரிந்து கொண்டு நண்பனாக முயற்சி செய்வான்.

அதிஷ்ட எண் 2:
அதிர்ஷ்ட எண் 2 க்கு இன்றைய நாள் நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். நீங்கள் ஒன்றை நினைக்க, அது வேறொன்றாக முடியும் எனினும் அது சுபமாக இருக்கும். கவலைகள் பறந்து போகும் இனிய நாளாகும். தேவையில்லாத மன இறுக்கம் உடல் நலத்தை கெடுக்கும் எனவே அதில் இருந்து விடுபடுவது நல்லது.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 3:
அதிர்ஷ்ட எண் 3 க்கு இன்றைய நாள் கலங்கடிக்கும் கவலையும் கரைந்து போகும் அற்புதம் நிகழும். கடைசி நிமிட பரபரப்பை தவிர்க்க திட்டமிட்டு செயலாற்றுங்கள். கணவன் மனைவிக்குள் காதலும் கசிந்துருகும். அனாவசிய பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பாதைகள் தென்படும்.

அதிர்ஷ்ட எண் 4:
அதிஷ்ட எண் 4 க்கு இன்றைய நாள் ஆவேசப்படாமல் இருப்பது நல்லது. அனைவரையும் எளிதாக கவரும் வண்ணம் உங்களுடைய பேச்சாற்றல் இருக்கப் போகிறது. குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். புதிய நட்பின் மூலம் புதிய பாதை பிறக்கும் வாய்ப்பு உண்டு. சுயமாக யோசிப்பீர்கள்.

- Advertisement -

அதிர்ஷ்ட எண் 5:
அதிர்ஷ்ட எண் 5 க்கு இன்றைய நாள் குதூகலத்திற்கு குறைவிருக்காது. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். போட்டியாளர்கள் மத்தியில் பெருமிதம் கொள்வீர்கள். சுய மதிப்பீடு செய்வது நல்லது. மனதை தளர விடாமல் முழுமூச்சோடு செய்யும் விஷயங்கள் வெற்றியை அடையும். கண்கள் கவி பாடும்.

அதிர்ஷ்ட எண் 6:
அதிர்ஷ்ட எண் 6 க்கு இன்றைய நாள் உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். கண்களால் பார்க்காமல் எதை முடிவு செய்ய வேண்டாம். நண்பர்கள் மூலம் அதிர்ஷ்டம் வரும். சுயபுத்தி தேவை.

அதிர்ஷ்ட எண் 7:
அதிர்ஷ்ட எண் 7 க்கு இன்றைய நாள் மனம் ஊஞ்சலாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற எண்ணங்கள் உங்கள் இலக்கை மாற்றி அமைக்கப்படும் கவனம் தேவை. நினைத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கனவுகள் நிறைவேற கூடிய பாதைகள் பிறக்கும். தொட்டது துலங்கும் இனிய நாளாகும்.

அதிர்ஷ்டமான எண் 8:
அதிர்ஷ்ட எண் 8 க்கு இன்றைய நாள் வீண் குழப்பங்கள் மறையும். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். சக போட்டியாளர்கள் மத்தியில் பாராட்டுகள் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரனையாக இருப்பது நல்லது. வெட்டி பந்தா தேவையில்லை, திறமைக்கு மதிப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான எண் 9:
அதிர்ஷ்ட எண் 9 க்கு இன்றைய நாள் முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த காரியத்தையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். முழு விஷயம் அறியாமல் விமர்சனம் செய்ய வேண்டாம். இதுவும் கடந்து போகும்.

- Advertisement -