- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 01 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் – 01 பிப்ரவரி 2026

- Advertisement -

மேஷம்


இந்த மாதத்தின் துவக்க நாளே உங்களுக்கு வெற்றி வெற்றி தான். நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவதாக இருந்தாலும் தேடலாம். பதவி உயர்வு , சம்பள உயர்வு முயற்சி செய்யலாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை கடவுள் நல்லபடியாக வெற்றி அடைய செய்வான். முடிந்தால் இன்று முருகரை வழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு ஒரு வேலை சாப்பாடு வாங்கி கொடுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மனக் கவலையோடு இருப்பீர்கள். பழைய ஞாபகங்கள் உங்களை இன்றைக்கான வேலையை செய்ய விடாமல் தடுக்கும். இருந்தாலும் மனதில் முருகரை நம்பிக்கையாக நினைத்து இந்த நாளை துவங்குங்கள். பிரச்சனைகளை சந்திக்கும் தைரியம் வரும். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று இந்த நாளை துவங்கினால் பிரச்சனைகள் இல்லை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மன பயம் இருக்கும். இந்த வேலையை செய்யலாமா, இது நமக்கு சரியாக வருமா, என்ற சந்தேகம் நிறைய இருக்கும். குழப்பம் வேண்டாம். முருகர் வழிபாடு செய்யுங்கள். குழப்பங்களில் இருந்து விடுபட்டு இந்த நாள் இனிய நாளாக அமையும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பதும் நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் மன சஞ்சலங்கள் காலை நேரத்தில் வரும். மாலை நேரத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் உண்டான தீர்வை அந்த முருக பெருமான் காட்டிக் கொடுப்பார். ஆகவே இன்று நீங்கள் பிரச்சனைகளை கண்டு பயந்து நடுங்கக் கூடாது. தடை கற்களை படிக்கற்களாக மாற்றும் வித்தையை கடவுள் உங்களுக்கு காட்டி கொடுப்பான். கவலை படாதீங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேளையிலும் வியாபாரத்திலும் பிரச்சனைகள் பெருசாக இருக்காது. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். சிரித்த முகத்துடன் இருப்பீர்கள். இந்த நாளை இனிய நாளாக அமைத்துக் கொடுத்த முருகனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். உங்களுக்கு சேராத உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று அதிகாலையிலேயே எழுந்து முருகனைக் கும்பிட்டு விட்டு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். உங்களுக்கு ஒரு துளி கூட சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. தாமதத்தால் சில பல பிரச்சனைகள் வரலாம். முக்கியமான விஷயங்களுக்கு செல்வதாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலைகளை முடித்து விடுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், நல்ல இறைவழிபாடு என்று இந்த நாள் மன நிறைவான நாளாக செல்லும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். எப்போதும் கலகலப்பு பேச்சும் இந்த நாளை நல்லபடியாக உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். சம்பளம் போனஸ், வரா கடன், ஏதோ ஒரு வகையில் லட்சுமி வந்து உங்கள் பையை நிரப்ப போகின்றாள். மனதும் சந்தோஷத்தில் நிரம்பி இருக்கும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த மாதம் முழுவதும் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சில பல சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையை போராடி இப்படித்தான் வெற்றி அடைய வேண்டுமா என்று, கடவுள் உங்களுக்கு ஒரு காட்சியை காட்டப் போகின்றான். எல்லாம் நல்லதற்காகத்தான் பிரச்சனைகளை கண்டு ஒருபோதும் துவண்டு போகக்கூடாது. ‌

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தை சேமிக்க கூடிய வித்தையை கற்று வைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத நண்பர்களோடு பழக வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை தேவை. தலைகனத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. இன்று முருகர் வழிபாடு உங்களுக்கு மனதில் அமைதியை தரும்.

சற்று முன்