இன்றைய ராசி பலன் – 02-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

இன்று ஆனந்தமான நாள். தந்தை வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் சுலபமாக முடியும். புதிய முயற்சியில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுங்கள், அரசாங்கம் சார்ந்த வேளைகளில் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் இன்று பணிச்சுமை காரணமாக சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்:
rishabam
அலுவலக பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள், அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். இன்று மகிழ்ச்சியான நாள். சிலர் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய்யின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்விர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் வெளியூர் பயணங்கள் செல்விர்கள்.

மிதுனம்:
இன்று புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம். வாழ்கை துணைவியுடன் சிறுசிறு மன கசப்பு ஏற்பட்டு விலகும். அரசு சார்ந்த வேலைகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் எதிர் பார்த்த விற்பனை குறைவாக தான் இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சுமாரான நாளாக அமையும்.

- Advertisement -

கடகம் :
Kadagam
அலுவலக பணிகளை மற்றவர்களை நம்பி ஓப்படைக்காமல், தாங்களே செய்து முடிப்பது சிறந்தது. இன்று குடும்பத்தாருடன் ஆலோசனை செய்து முடிவு எடுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இருக்கும. மனைவியின் மூலம் இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்:
simam
இன்று புதிய முயற்சியில் ஈடுபடுபவர்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள். தாய் வழி உறவுகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும். இன்று வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள். வியாபாரத்தின் சிறு தடங்களை எதிர் கொள்வீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையை கடைபிடியுங்கள்.

கன்னி:

இன்று ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். தேவை இல்லாத வீண்செலவுகள் ஏற்படும். அதனால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அலுவலகத்தில் பனிசுமை அதிகரிக்கும், அதை பணியாளர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று பயணம் மேற்கொள்வீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

துலாம்:

இன்று அலுவலகத்தில் பனிசுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். கையிருப்பு பணம் இருந்தால் அதை சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இன்று ஏற்ற இரக்கம் காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாருடன் தெய்வ தலங்களுக்கு செல்விர்கள்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

பெற்றோரின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யுங்கள். தந்தை வழி உறவுகளால் மாற்றம் ஏற்படும். அலுவலத்தில் பணிச்சுமை அதிகரிப்பால், பணியாளர்களுடன் நிதானமாக செயல்படுங்கள். வியாபாரதில் இன்று எதிர்பார்த்த லாபம் சுமாராகத்தான் இருக்கும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரிச்சு நடந்துகொள்ளுங்கள்.

தனுசு:

இன்று அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். பணியாளர்களுடன் அனுசரிச்சு செல்லுங்கள். குலதெய்வ வழிபாட்டிற்கு வெளியூர் பயணங்கள் செல்விர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் இருக்கும். இன்று மாலையில் உறவினர்களை சந்தித்து உரையாடுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:
magaram
பிள்ளைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவக்கூடும். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்விர்கள். வியாபாரத்தில் வழக்கம் போல் விற்பனை காணப்படும். மாலையில் உறவினர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளின் கேட்டு அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

கும்பம்:

இன்று குடும்பத்தாரின் ஆலோசனைகளை அறிந்து முடிவுகளை எடுப்பது சிறந்தது. அலுவலகத்தில் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இன்று ஏற்ற தாழ்வு காணப்படும். குடும்பத்தாருடன் தெய்வ வழிபாடு தலங்களுக்கு செல்விர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

இன்று ஆனந்தமான நாள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தாரின் தேவைக்கேற்ப நடந்து கொள்வீர்கள். இன்று வியாபாரத்தில் ஏற்ற தாழ்வு இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மாலையில் உறவினர்களின் வீட்டுக்கு செல்விர்கள். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கலின் ஆதரவு கிடைக்கும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -