இன்றைய ராசி பலன் – 02-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiமாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiதந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

ஜூலை மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்:

- Advertisement -

midhunamபுதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

கடகம்:

Kadagam Rasiவியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். தந்தையுடன் இருந்து வந்த பிணக்குகள் தீருவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:

- Advertisement -

simmamவெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. ஆனால், பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasiஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். உற்சாகமான நாள். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiநண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:

virichigamஅலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

தனுசு:

Dhanusu Rasiஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனம் தேவை. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:

Magaram rasiநண்பர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாலையில் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

கும்பம்:

Kumbam Rasiவீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். வாகனத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். இன்று எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.
மீனம்:

meenamவெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். உற்சாகமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

இன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -